ரியாத் வானூர்தி நிலையம் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் !
யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள், சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச வானூர்தி நிலையம் மற்றும் நிதி மையம் ஆகியவற்றைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ஈரானின் ஆதரவைப் பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள், இந்தத் தாக்குதலுக்கு இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாகக் கூறியுள்ளனர்.
சவூதி அரேபியாவின் முக்கிய சர்வதேச வானூர்தி நிலையங்களில் ஒன்றான கிங் காலித் சர்வதேச வானூர்தி நிலையம், தலைநகர் ரியாத்துக்கான பிரதான வானூர்திப் போக்குவரத்து மையமாகச் செயல்பட்டு வருகின்றது.
மேலும், ரியாத்தில் அமைந்துள்ள நிதி மையத்தையும் தாங்கள் இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக ஹூதி அமைப்பு தெரிவித்துள்ளது.


