உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
17 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஹொரணை – கொட்டாவ வீதியில் இடம்பெற்ற கோர விபத்து

இலங்கை செய்திகள் 9 மணி நேரம் முன்
81 பார்வைகள்

ஹொரணை – கொட்டாவ வீதியில் மத்தேகொடை சந்தைக்கு அருகில் சொகுசு கார் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று, மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி மீது மோதி இன்று (16) விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று பிற்பகல் ஏற்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த ஐவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் இருவரது கால்களில் பாரியளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஹொரணையில் இருந்து கொட்டாவ நோக்கி அதிவேகமாகப் பயணித்த சொகுசு கார் ஒன்று, மத்தேகொடை சந்திக்கு அருகில் வீதியை விட்டு விலகி, கொட்டாவையில் இருந்து ஹொரணை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மோதியுள்ளது.

விபத்துக்குள்ளான இரு மோட்டார் சைக்கிள்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், முச்சக்கர வண்டியும் சேதமடைந்துள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே இந்த விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுகின்றது.​

இச்சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹோமாகம தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சரித் அபேசிங்கவின் ஆடம்பர சொத்துக்கள் முடக்கம்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருடன் தொடர்புடைய இலஞ்ச ஊழல் வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சரித் அபேசிங்கவுக்குச் சொந்தமான ஆடம்பர சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

90 0 0
இலங்கை செய்திகள்

15 இலட்சம் பெறுமதியான போ@தைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது!

கொழும்பில் இருந்து பொதிகள் போக்குவரத்து சேவை நிறுவனம் மூலம் மொனராகலை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் பயணப் பையொன்றில் பொதி செய்து அனுப்பப்பட்ட, 15…

90 0 0
இலங்கை செய்திகள்

யாழில். இளைஞர்களுக்கு இடையே மோதல் : கத்தரிக்கோலால் தாக்கப்பட்ட இளைஞன் ப@லி!

யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அச்சேலு பூலசிற்றி பகுதியில் நேற்றிரவு சுமார் 10 மணியளவில் இரு இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த…

90 0 0
இலங்கை செய்திகள்

காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் உற்பத்திப் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாகத் தொடரும் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமல் உற்பத்திப் பொருளாதாரத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மக்களின்…

61 0 0