உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
17 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

25 வாரக் கருவுக்கு அறுவை சிகிச்சை: இந்திய மருத்துவர்களின் புதிய சாதனை!

இந்திய செய்திகள் 18 மணி நேரம் முன்
88 பார்வைகள்

இந்தியாவின் டெல்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில், 25 வாரக் கர்ப்பிணிப் பெண்ணின் கருவில் காணப்பட்ட கடுமையான முதுகெலும்புக் குறைபாட்டைச் சீர்செய்யும் திறந்தவெளி கருப்பை அறுவை சிகிச்சை முதன்முறையாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த, 12ஆம் திகதி சுமார் ஆறு மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த அறுவை சிகிச்சையின் மூலம், கருவானது தாயின் கருப்பையில் இருக்கும்போதே ‘மைலோமெனிங்கோசீல்’ (Myelomeningocele) எனப்படும் முதுகெலும்பு மற்றும் நரம்பு மண்டலப் பாதிப்பு சீர்செய்யப்பட்டுள்ளது.

நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் தீபக் குப்தா தலைமையில், தாய்-சேய் மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட 30 இற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய பல்துறை மருத்துவக் குழுவினர் இணைந்து இந்த அறுவை சிகிச்சையை முன்னெடுத்துள்ளனர்.

இந்தியாவின் குழந்தை நரம்பியல் அறுவை சிகிச்சை மற்றும் கரு மருத்துவப் பராமரிப்புத் துறையில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

கருவில் இருக்கும்போதே இத்தகைய குறைபாடுகளைச் சீர்செய்வதன் மூலம், பிறப்புக்குப் பின்னர் ஏற்படக்கூடிய நரம்பியல் பாதிப்புகளைக் குறைக்கவும், குழந்தையின் எதிர்கால உடல்நலத்தை மேம்படுத்தவும் முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

சீனாவுக்கு எதிரான தொழில்நுட்பக் கூட்டணியில் இந்தியா?

சீனா மேம்பட்ட தொழில்நுட்பங்களை, குறிப்பாக உயர்தர செமிகண்டக்டர் சிப்களைப் பெறுவது குறித்த கவலைகள் அதிகரித்து வரும் சூழலில், முக்கியமான தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) விநியோகச்…

102 0 0
இந்திய செய்திகள்

இளவரசர் வில்லியமுடன் இந்தியா செல்கிறார் வேல்ஸ் இளவரசி கேட்!

பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசி கேட், புற்றுநோய்க்கான சிகிச்சைக்குப் பின்னர் மேற்கொள்ளும் மிக முக்கியமான வெளிநாட்டுப் பயணமாக, இந்த வாரம் இந்தியாவில் நடைபெறவுள்ள ‘எர்த்ஷாட் பரிசு’ (Earthshot Prize)…

97 0 0
இந்திய செய்திகள்

மதுரையில் பிரபல நகைக்கடை கொள்ளை: இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி கைது!

இந்தியாவின் மதுரையில் புதிதாகத் திறக்கப்பட்ட பிரபல நகைக்கடையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்ஸ்டாகிராம் பிரபலமான மீனாட்சி கைது செய்யப்பட்டுள்ளார்.  கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான 25…

98 0 0
இந்திய செய்திகள்

வரலாற்றைத் திரித்ததாகக் குற்றச்சாட்டு : சோனியாவின் நூலை எரித்து எதிர்ப்பு!

1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக சோனியா காந்தி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ள கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவரது நூலை சீக்கிய அமைப்பினர்…

129 0 0