உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
17 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

காடுகள், களஞ்சியங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான பணம்!

உலக செய்திகள் 19 மணி நேரம் முன்
91 பார்வைகள்

ஹங்கேரியின் முன்னாள் பிரதமர் விக்டர் ஓர்பானின் ஆட்சிக் காலத்தில் அமைச்சராகப் பதவி வகித்த மிக்லோஷ் செஸ்டாக்கிற்கு எதிரான இலஞ்ச ஊழல் விசாரணையில், சுமார் 20 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பணத்தில் ஒரு பகுதி காடுகளில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததுடன், ஏனையவை விவசாயப் பண்ணைக் கட்டடங்கள் மற்றும் களஞ்சியசாலைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக ஹங்கேரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சருக்கு எதிரான இலஞ்ச ஊழல் விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்தப் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் 16 ஆண்டுகளாக ஹங்கேரியை ஆட்சி செய்த விக்டர் ஓர்பானைத் தோற்கடித்து பீட்டர் மக்யார் பிரதமராகப் பதவியேற்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பாதிக்கப்பட்ட உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதுடன், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் புதிய பிரதமர் உறுதியளித்துள்ளார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

காட்டுத் தீயால் ஏற்பட்ட புகைமூட்டம் – சிங்கப்பூர், மலேசியாவிடம் இந்தோனேசிய ஜனாதிபதி மன்னிப்புக் கோரல்!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக உருவான புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிடம் அந்நாட்டு ஜனாதிபதி பிரபோவோ சுபியாந்தோ மன்னிப்புக் கோரியுள்ளார். ஆசியான்…

94 0 0
உலக செய்திகள்

ரியாத் வானூர்தி நிலையம் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் !

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள், சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச வானூர்தி நிலையம் மற்றும் நிதி மையம் ஆகியவற்றைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்…

99 0 0
உலக செய்திகள்

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி : ஆரம்பகட்ட சோதனைகள் வெற்றி

ரஷ்யா உருவாக்கியுள்ள தனிப்பயனாக்கப்பட்ட mRNA தொழில்நுட்பத்திலான புற்றுநோய் சிகிச்சைத் தடுப்பூசியான NeoOncovac, ஆரம்பகட்டத்தில் நம்பிக்கையளிக்கும் முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ரஷ்ய ஆய்வாளர்களின் தகவலின்படி, மெலனோமா எனப்படும் தோல்…

102 0 0
உலக செய்திகள்

பயணிகள் கப்பல் மீது மோதிய பாரிய எண்ணெய்த் தாங்கிக் கப்பல்.!

அமெரிக்காவின் மிசிசிப்பி ஆற்றில் நியூ ஆர்லியன்ஸ் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த பயணிகள் கப்பல் ஒன்றின் மீது பாரிய எண்ணெய்த் தாங்கிக் கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை (13) மோதிய விபத்தில்,…

106 0 0