உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
9 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சந்தேக நபர்களைத் தடுத்து வைக்கும் காலம் 48 மணிநேரமாக குறைக்கப்படும் – சட்டமா அதிபர் அறிவிப்பு

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
78 பார்வைகள்

உத்தேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர் ஒருவரைத் தடுத்து வைக்கும் கால எல்லையை 72 மணித்தியாலங்களிலிருந்து 48 மணித்தியாலங்களாகக் குறைத்து சட்டமூலத்தில் திருத்தம் செய்யவுள்ளதாகச் சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இத்தகவலை நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டிருந்த ‘பச்சை குத்துதல்’ (Tattoos) மற்றும் ‘அடையாளங்கள்’ தொடர்பான ஏற்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகச் சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். 

இதற்கு மேலதிகமாக, தீவிர குற்றச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளின் எந்தவொரு தகவலையும் அல்லது விடயத்தையும் ஊடகங்களில் வெளியிடுவதற்கு முன்னர், உரிய நீதிமன்றத்தின் முன்அனுமதியைப் பெற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்த சட்டப்பிரிவையும் நீக்கவுள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று (9) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இந்த அறிவிப்பை நீதிமன்றத்தில் விடுத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கதிரியக்கவியலாளர் பதவி நிலை உள்ளீர்ப்பு வர்த்தமானிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கதிரியக்கவியலாளர் (Radiographer) பதவி நிலைக்கான பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள பட்டதாரிகளைச் சேவையில் உள்ளீர்ப்பதற்காக வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக, இலங்கை மனித…

57 0 0
இலங்கை செய்திகள்

தேரர்களின் சத்தியாக்கிரகத்தில் கைதானவர் ஹெரோயின் பயன்படுத்தியமை உறுதி!

அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரரருடன்  இருந்தபோது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர்…

78 0 0
இலங்கை செய்திகள்

கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 5 பிக்குகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை!

அனுராதபுரம் – ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐந்து பௌத்த பிக்குகளை எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றத்தில்…

75 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கில் உள்ள மீனவர்களின் பிரச்சினைகளுக்கு அரசு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.!

கடற்றொழில் அமைச்சின் ஊடாக நடத்தப்பட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்றும் குறிப்பாக மன்னார் மாவட்டத்திலும் கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து…

88 0 0