உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
9 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சம்பளக் குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் வைத்தியர்கள் நாளை போராட்டம்

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
82 பார்வைகள்

மருத்துவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமை உள்ளிட்ட பல பிரதான கோரிக்கைகளை முன்வைத்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாகக் கவனவீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

மருத்துவர்களின் குறைக்கப்பட்டுள்ள சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை மீண்டும் வழங்குதல், உத்தியோகபூர்வ தங்குமிட வசதிகளில் நிலவும் கடுமையான பிரச்சினைகளைத் தீர்த்தல் மற்றும் சேவை நேரத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள சங்கத்தின் அனைத்து மாவட்டக் கிளைகளின் பிரதிநிதிகளும் இந்தக் கவனவீர்ப்புப் போராட்டத்தில் நேரில் பங்கேற்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தப் போராட்டம் வேலைநிறுத்தம் அல்லது பணிப்புறக்கணிப்பாக அமையாது என்றும், நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் வழமையான மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றிச் சீராக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

தமது நியாயமான கோரிக்கைகளுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக அரசுகளிடம் தீர்வை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் மருத்துவர்களின் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படாவிட்டால், நாடு தழுவிய ரீதியில் கடுமையான மேலதிக தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கதிரியக்கவியலாளர் பதவி நிலை உள்ளீர்ப்பு வர்த்தமானிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கதிரியக்கவியலாளர் (Radiographer) பதவி நிலைக்கான பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள பட்டதாரிகளைச் சேவையில் உள்ளீர்ப்பதற்காக வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக, இலங்கை மனித…

58 0 0
இலங்கை செய்திகள்

தேரர்களின் சத்தியாக்கிரகத்தில் கைதானவர் ஹெரோயின் பயன்படுத்தியமை உறுதி!

அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரரருடன்  இருந்தபோது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர்…

79 0 0
இலங்கை செய்திகள்

சந்தேக நபர்களைத் தடுத்து வைக்கும் காலம் 48 மணிநேரமாக குறைக்கப்படும் – சட்டமா அதிபர் அறிவிப்பு

உத்தேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர் ஒருவரைத் தடுத்து வைக்கும் கால எல்லையை 72 மணித்தியாலங்களிலிருந்து 48 மணித்தியாலங்களாகக் குறைத்து சட்டமூலத்தில் திருத்தம் செய்யவுள்ளதாகச்…

78 0 0
இலங்கை செய்திகள்

கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 5 பிக்குகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை!

அனுராதபுரம் – ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐந்து பௌத்த பிக்குகளை எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றத்தில்…

76 0 0