அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: குடும்பத்துடன் கிரீஸ் புறப்பட்டார் மு.க. ஸ்டாலின்
பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குடும்பத்தினருடன் கிரீஸ் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் வரும் நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற உள்ளது.
நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் பங்கேற்கின்றனர்.
இந்த திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி மற்றும் சபரீசன் ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3.50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டனர்.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் துபாய் வழியாக கிரீஸ் நாட்டிற்குச் சென்றுள்ள அவர்கள், திருமண நிகழ்வுகளை முடித்துவிட்டு வரும் நவம்பர் 13-ம் தேதி மீண்டும் சென்னை திரும்ப உள்ளனர்.
இந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்தும் தனது குடும்பத்தினருடன் இன்று காலை சென்னையில் இருந்து கிரீஸ் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
கிரீஸ் நாட்டில் நடைபெறும் திருமணத்தைத் தொடர்ந்து, வரும் நவம்பர் 21-ம் தேதி சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் எனப் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.


