உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
8 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

காலி மீன்பிடித் துறைமுகத்தில் தீ விபத்து : 7 படகுகள் சேதம்

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
65 பார்வைகள்

காலி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் உள்ள படகு பராமரிப்புத் தளத்தில் இன்று (8) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில், பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்டிருந்த 7 மீன்பிடிப் படகுகள் முற்றிலும் தீக்கிரையாகியுள்ளன.

சம்பவம் தொடர்பாக காலி துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்தத் தீ விபத்தில் எவருக்கும் காயம் அல்லது பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என காலிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்.ஜி.ஏ. புஷ்பகுமார தெரிவித்தார்.

இருப்பினும், இந்த வளாகத்திற்குள் பயன்படுத்தப்படாத மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்களை அழைத்து, அவற்றை அவ்வாறு நிறுத்தி வைத்ததற்கான காரணத்தைக் கேட்டறிந்து, பொலிஸ் மா அதிபருக்கு முழுமையான அறிக்கையொன்றை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து உடனடியாகச் செயற்பட்ட காலி துறைமுகப் பொலிஸார், இலங்கை கடற்படையின் ‘தக்ஷிண’ முகாம் அதிகாரிகள் மற்றும் பிரதேச மீன்பிடிச் சமூகத்தினர் இணைந்து பெரும் சிரமத்திற்கு மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஊழலை ஒழிக்கும் அனுர அரசு வடக்கு ஆளுநர் தொடர்பில் முறையான விசாரணை நடத்துமா? இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி

வடக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் வேதநாயகன் யாழ்மாவட்ட அரசாங்க அதிபராக இருந்தபோது இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் அனுர அரசு முறையான விசாரணையை நடத்துமா என இலங்கை…

52 0 0
இலங்கை செய்திகள்

தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் தேசிய ரீதியில் 2ம் இடம் பெற்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை சாதனை…!

தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் நாடளாவிய ரீதியில் 2ம் இடம் பெற்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. இதற்கான விருது வழங்கும்…

59 0 0
இலங்கை செய்திகள்

தெனியாயவில் நீராட சென்று மாயமான நால்வரின் சட@லங்களும் மீட்பு!

தெனியாய, பெவரலிய பகுதியில் உள்ள ‘கலேதொல’ நீரோடையில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல்போன நான்கு இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் கணினி நிறுவனம் ஒன்றில்…

88 0 0
இலங்கை செய்திகள்

யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

யாழ்ப்பாணம் – மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண பணிகளை எதிர்வரும் வாரங்களுக்குள் மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்…

82 0 0