தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் தேசிய ரீதியில் 2ம் இடம் பெற்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை சாதனை…!
தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் நாடளாவிய ரீதியில் 2ம் இடம் பெற்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. இதற்கான விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (08.11.2026) மாலை நடைபெற்றது.
இரண்டாமிடம் பெற்றதற்கான விருதினை வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் தமது சபையின் குழுவினரோடு அதிதிகளிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
தவிசாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு வவுனியா மாவட்டம் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச மக்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


