உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
7 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழில் வீடொன்றில் இருந்து இருவரது சட@லங்கள் மீட்பு!

இலங்கை செய்திகள் 13 மணி நேரம் முன்
92 பார்வைகள்

வேலணை – செட்டிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இருவரது சடலங்கள் இன்றையதினம் மீட்கப்பட்டன. முத்துலிங்கம் புவனேஸ்வரி (வயது 74) மற்றும் சுப்பிரமணியம் பாலசுந்தரம் (வயது 73) ஆகிய சகோதரர்கள் இருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

அயலில் உள்ளவர்கள், அந்த வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர். இதன்போது அங்கு வந்த பொலிஸார் வீட்டினை அவதானித்தவேளை குறித்த ஆண் வீட்டுக்கு வெளியே உயிரிழந்து காணப்பட்டதுடன், பெண் வீட்டுக்கு உள்ளே உயிரிழந்து காணப்பட்டார்.

அந்த பெண்ணின் சடலம் உருக்குலைந்து காணப்படுவதுடன், மற்றைய நபர் உயிரிழந்து சுமார் 48 மணிநேரம் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. அவர்களுடன் மாற்றுத்திறனாளி பெண்ணொருவர் வசித்து வருகிறார்.

ஒரு சில தினங்களுக்கு முன்னர் பதிவுகளுக்காக அந்த வீட்டுக்கு சென்ற கிராம சேவகர் குறித்த இருவரையும் விசாரித்தவேளை அவர்கள் உள்ளே உறங்குவதாக மாற்றுத்திறனாளி பெண் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன், சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் புதிய நீதவான் நியமனம்.!

கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் புதிய நீதவானாக கோசல சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார். நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அவர் எதிர்வரும் திங்கட்கிழமை (9) தனது கடமைகளைப்…

77 0 0
இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு; போக்குவரத்து பாதிப்பு.!

இன்று (6) பிற்பகல் வேளையில் பலத்த மழை காரணமாக கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள சில பகுதிகளில் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் தடங்கல்கள்…

76 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை.!

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை மேற்கொள்வதுடன், நாய்களுக்கான தடுப்பூசித் திட்டத்தையும் விரிவுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணக் ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று…

79 0 0
இலங்கை செய்திகள்

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆசிரியர்களுக்கான மருத்துவ முகாம்.!

கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் 80ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், பழைய மாணவிகள் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை…

77 0 0