உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
7 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தான் பொது வேட்பாளராக களமிறங்குவதற்கு திமுக மற்றும் அதிமுக ஆதரவு வழங்க வேண்டும் : சீமான் வேண்டுகோள்

இந்திய செய்திகள் 6 மணி நேரம் முன்
83 பார்வைகள்

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் தன்னைப் பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு திமுக மற்றும் அதிமுக ஆதரவு வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்வைத்துள்ள கோரிக்கை, அக்கட்சியினர் மத்தியில் விவாதத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடத் தயாராகி வரும் சீமான், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தமக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், இடைத்தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் கலந்துரையாடலாம் எனத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், சீமான் பொது வேட்பாளராகக் களமிறங்கும் சாத்தியம் குறித்து அரசியல் வட்டாரங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. எனினும், அம்பாசமுத்திரம் தொகுதியில் தமது கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை திமுக மற்றும் அதிமுக முன்னெடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், சீமானைப் பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு தமிழக வெற்றிக் கழகம் விருப்பம் கொண்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்தால் விஜய்யை எதிர்கொள்ள முடியும் என்ற அரசியல் நிலைப்பாட்டை முன்னிறுத்தும் முயற்சியாக இது அமையலாம் எனவும் சில தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், சீமானின் இந்தக் கோரிக்கை நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 16 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து அரசியல் செய்து வந்த நிலையில், தற்போது இடைத்தேர்தலில் வெற்றிபெற அந்த கட்சிகளின் ஆதரவையே நாடுவது பொருத்தமானதா என்ற விவாதம் அக்கட்சிக்குள் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானுக்கு திமுக ஆதரவளித்தால், ஏனைய தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதேவேளை, அரசியல் ரீதியான பலன் எதுவும் இல்லாத நிலையில் திமுகவும் அதிமுகவும் ஏன் சீமானுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.

இதனால், பொது வேட்பாளர் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளும் கட்சிக்குள் எழுந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், சீமானின் பொது வேட்பாளர் கோரிக்கை தொடர்பில் சம்பந்தப்பட்ட கட்சிகள் இதுவரை இறுதி முடிவை அறிவிக்கவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

டெல்லியில் கார் காட்சியறை ஒன்றில் பாரிய தீப்பரவல்!

இந்தியாவின் தெற்கு டெல்லியில் அமைந்துள்ள முன்னணி கார் காட்சியறையொன்றில் (Car Showroom) இன்று திடீரெனப் பயங்கர தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தெற்கு டெல்லியின் சைதுலாஜாப் பகுதியில் அமைந்துள்ள கியா…

76 0 0
இந்திய செய்திகள்

திருச்சி கிழக்கில் தவெக சார்பில் நடிகை திரிஷா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்!

தமிழகத்தில் எதிர்வரும் இடைத்தேர்தலை முன்னிட்டு, திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் நடிகை திரிஷா அல்லது கட்சியின் முக்கிய நிர்வாகியான ஜோன் ஆரோக்கியசாமி…

93 0 0
இந்திய செய்திகள்

தெலங்கானாவில் ஓடும் பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநர் ப@லி!

இந்தியாவில் தெலங்கான மாநிலத்தில் சில்லறைப் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநர் குண்ட்லா பிரவலிகா (24) சிகிச்சை பலனின்றி பத்து நாட்களுக்கு…

100 0 0
இந்திய செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் இந்தியாவுக்கு முக்கிய சலுகை – ஈரான் அறிவிப்பு!

இந்தியா, சீனா, ஈராக் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்…

100 0 0