உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
8 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

டெங்கு ஒழிப்பு வாரம் நாளை ஆரம்பம்!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
85 பார்வைகள்

நாட்டில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாகக் காணப்படும் 74 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில், நாளை (09) முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த காலங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, டெங்கு நுளம்புகளின் பெருக்கம் மற்றும் தற்போதைய காலநிலை மாற்றங்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களைக் கண்டறிந்து அழித்தல், சுற்றுப்புறங்களைத் தூய்மைப்படுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறிப்பாக, வீடுகள், காணிகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், பிரிவேனாக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் விசேட சோதனைகள் மற்றும் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த நடவடிக்கையில் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு, உள்ளூராட்சி நிறுவனங்கள், ‘Clean Sri Lanka’ செயலகம், காவல்துறை, முப்படையினர் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து செயற்படவுள்ளன.

அத்துடன், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் நாளாந்தம் கண்காணிக்கப்படுவதுடன், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் நுளம்புகளின் பெருக்கமும் தொடர்ந்து அவதானிக்கப்படும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் நவம்பர் 02ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இந்த நடவடிக்கை, சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 09ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்கக்கூடிய பாத்திரங்கள், பழைய டயர்கள், போத்தல்கள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்டவற்றை அகற்றி, டெங்கு நுளம்புகள் பெருகுவதைத் தடுக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஊழலை ஒழிக்கும் அனுர அரசு வடக்கு ஆளுநர் தொடர்பில் முறையான விசாரணை நடத்துமா? இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி

வடக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் வேதநாயகன் யாழ்மாவட்ட அரசாங்க அதிபராக இருந்தபோது இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் அனுர அரசு முறையான விசாரணையை நடத்துமா என இலங்கை…

52 0 0
இலங்கை செய்திகள்

தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் தேசிய ரீதியில் 2ம் இடம் பெற்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை சாதனை…!

தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் நாடளாவிய ரீதியில் 2ம் இடம் பெற்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. இதற்கான விருது வழங்கும்…

59 0 0
இலங்கை செய்திகள்

தெனியாயவில் நீராட சென்று மாயமான நால்வரின் சட@லங்களும் மீட்பு!

தெனியாய, பெவரலிய பகுதியில் உள்ள ‘கலேதொல’ நீரோடையில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல்போன நான்கு இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் கணினி நிறுவனம் ஒன்றில்…

88 0 0
இலங்கை செய்திகள்

காலி மீன்பிடித் துறைமுகத்தில் தீ விபத்து : 7 படகுகள் சேதம்

காலி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் உள்ள படகு பராமரிப்புத் தளத்தில் இன்று (8) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில், பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்டிருந்த 7 மீன்பிடிப் படகுகள் முற்றிலும்…

64 0 0