உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
9 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அம்பாறையில் காட்டு யானை தாக்கியதில் இராணுவ அதிகாரி உயி@ரிழப்பு

81 பார்வைகள்

அம்பாறை புறநகர்  பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை புறநகர் பகுதியில் உள்ள குளம் ஒன்றில்  மீன்பிடிக்கச் சென்றபோது இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 6 ஆம் திகதி  இரவு   உயிரிழந்தவர் தனது சகோதரருடன் மீன்பிடிக்க குளத்திற்கு  நடந்து சென்றுகொண்டிருந்தபோது  அங்கு திடீரென வந்த காட்டு யானை அவர்களைத் துரத்தியுள்ளது. இருவரும் காட்டு யானையிடமிருந்து தப்பிக்க ஓடியவேளை, எதிர்பாராதவிதமாக உயிரிழந்தவர் யானையால் தாக்கப்பட்டுள்ளார்.

இக்காட்டு யானைத் தாக்குதலில் உயிரிழந்தவர்  அம்பாறையில் உள்ள கொண்டவட்டுவான்   இராணுவ முகாமில் பணியாற்றி வந்த இராணுவ வீரராவார். அவர் சம்பவ தினத்திற்கு முன்னர் மாலை விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்த நிலையில் தனது சகோதரருடன் மீன்பிடிக்கச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு உயிரிழந்தவர் ரவீந்திர குமார எனும் இராணுவ சார்ஜென்ட் ஆவார்.

இச்சம்பவம் தொடர்பாக அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல  அம்பாறை பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி மற்றும் அம்பாறை பிரதேச 1 உதவி பொலிஸ் அத்தியட்சகர்  சம்பத் விக்ரமரத்ன ஆகியோரின் உத்தரவுகளுக்கு இணங்க  அம்பாறை தலைமையகத்தின் பிரதம பொறுப்பதிகாரி  உபுல் இந்திரஜித் குணவர்தன தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், வனவிலங்குத் திணைக்களத்தின் அம்பாறை கள அலுவலகத்தைச் சேர்ந்த  கீஹன் சில்வா உள்ளிட்ட அதிகாரிகளும் வனவிலங்குத் திணைக்களத்தின் சார்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற தீபாவளி விசேட பூஜை வழிபாடு.!

தீபாவளித் திருநாளை முன்னிட்டு அம்பாறை மாவட்டப் பொலிஸாரின் ஏற்பாட்டில் விசேட பூஜை வழிபாட்டு நிகழ்வு திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் வெகுசிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது. திருக்கோவில்…

81 0 0
அம்பாறை செய்திகள்

சம்பளக் குறைப்புக்கு எதிர்ப்பு- அம்பாறை பொது மருத்துவமனைக்கு முன்பாக மருத்துவர்கள் தீவிர போராட்டம்!

அரச மருத்துவர்களின் சம்பளக் குறைப்பு மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கிழக்குக் கிளையினால் அம்பாறை…

73 0 0
அம்பாறை செய்திகள்

இடிந்து விழும் நிலையில் உள்ள சொறிக்கல்முனை – வீரமுனை பிரதான வீதி.!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நாவிதன்வெளி பிரதேசத்தை இணைக்கும் சொறிக்கல்முனை – வீரமுனை எல்லைக்கு அருகில் உள்ள பிரதான வீதியில் அமைந்துள்ள ஆபத்தான வளைவுப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும்…

104 0 0
அம்பாறை செய்திகள்

பொலிஸாரை உந்துருளியால் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இளைஞர்கள்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸாரை உந்துருளியால் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இரு இளைஞர்களை எதிர்வரும் நவம்பர் 18ஆம்…

104 0 0