உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
9 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற தீபாவளி விசேட பூஜை வழிபாடு.!

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
80 பார்வைகள்

தீபாவளித் திருநாளை முன்னிட்டு அம்பாறை மாவட்டப் பொலிஸாரின் ஏற்பாட்டில் விசேட பூஜை வழிபாட்டு நிகழ்வு திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் வெகுசிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.

திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சமூகப் பொலிஸ் பிரிவினரின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், அம்பாறை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஏ.எஸ்.பி.சி சுஜித் வேதமுல்ல பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.வி. கஸ்தூரியாராச்சி, அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நுவான் தந்தநாராயண, திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார், அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஆலய நிர்வாகத்தினர், பொது அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஆலயத்திற்கு வருகைதந்த பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு, சிவில் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளால் மலர் மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் கௌரவிப்புச் செய்யப்பட்டது. அத்துடன், மாணவர்களின் பாரம்பரிய கோலாட்டக் கலை நிகழ்வுகளுடன் சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ நீ. அங்குசநாத குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விசேட நிகழ்வுகள் நடைபெற்றதுடன், அம்பாறை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோர் சமகால நல்லிணக்கச் சூழலை வலுப்படுத்தும் நோக்கில் உரையாற்றினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

அம்பாறையில் காட்டு யானை தாக்கியதில் இராணுவ அதிகாரி உயி@ரிழப்பு

அம்பாறை புறநகர்  பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அம்பாறை புறநகர் பகுதியில் உள்ள குளம் ஒன்றில்  மீன்பிடிக்கச் சென்றபோது…

79 0 0
அம்பாறை செய்திகள்

சம்பளக் குறைப்புக்கு எதிர்ப்பு- அம்பாறை பொது மருத்துவமனைக்கு முன்பாக மருத்துவர்கள் தீவிர போராட்டம்!

அரச மருத்துவர்களின் சம்பளக் குறைப்பு மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கிழக்குக் கிளையினால் அம்பாறை…

73 0 0
அம்பாறை செய்திகள்

இடிந்து விழும் நிலையில் உள்ள சொறிக்கல்முனை – வீரமுனை பிரதான வீதி.!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நாவிதன்வெளி பிரதேசத்தை இணைக்கும் சொறிக்கல்முனை – வீரமுனை எல்லைக்கு அருகில் உள்ள பிரதான வீதியில் அமைந்துள்ள ஆபத்தான வளைவுப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும்…

104 0 0
அம்பாறை செய்திகள்

பொலிஸாரை உந்துருளியால் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இளைஞர்கள்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸாரை உந்துருளியால் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இரு இளைஞர்களை எதிர்வரும் நவம்பர் 18ஆம்…

104 0 0