உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
7 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மலையகத்தில் களைகட்டும் தீபாவளி வியாபாரம்.!

இலங்கை செய்திகள் 11 நிமிடங்கள் முன்
83 பார்வைகள்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புத்தாடைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மலையகத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பெருமளவிலான மக்கள் ஹட்டன் உள்ளிட்ட பிரதான நகரங்களை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இன்று (07) முதல் ஹட்டன் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக, பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் குடும்பத்தினருடன் வருகைதந்து புத்தாடைகள், காலணிகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதேவேளை, தீபாவளி வியாபார நடவடிக்கைகளுக்காக வெளிமாவட்டங்களிலிருந்தும் பெருமளவிலான வியாபாரிகள் ஹட்டன் நகருக்கு வருகைதந்துள்ளனர். இதனால் நகரின் வர்த்தக நடவடிக்கைகளும் களைகட்டியுள்ளன.

கொழும்பில் இருந்து ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு வருபவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. முச்சக்கரவண்டி சாரதிகளுக்குரிய வசூலும் சிறப்பாக உள்ளது.

அதேவேளை, ஹட்டனில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நுகர்வோர் தமது உடைமைகள் மற்றும் பணம் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும், விபத்துகளை தவிர்த்துக்கொள்வது பற்றியும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இன்று இடம்பெற்ற கோர விபத்து; மூவர் உ**யிரிழப்பு.!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் இன்று (7) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்தில்…

71 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40 ஆவது ஆண்டு நிறைவு; “லீடர் அஷ்ரப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் போட்டி.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “லீடர் அஷ்ரப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று (07)வரிப்பத்தாஞ்சேனையில்…

77 0 0
இலங்கை செய்திகள்

திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பேருந்துகள்; சிக்கிய சாரதிகள், நடத்துநர்கள்.!

ஹட்டன் பேருந்து நிலையத்திலிருந்து குறுகிய மற்றும் நீண்ட தூரப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் இன்று (07) திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதேவேளை, ஹட்டன் நோக்கி…

84 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி நால்வர் மாயம்.!

தெனியாய, பெவரலிய பகுதியில் அமைந்துள்ள ஓடை ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுகேகொடையிலிருந்து குறித்த பகுதிக்கு சென்றிருந்த 7 பேர் கொண்ட…

86 0 0