உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
7 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

“சொந்த மண்ணில் இறக்கவும் தயார்” – பங்களாதேஷ் செல்ல துணியும் ஷேக் ஹசீனா!!

உலக செய்திகள் 13 மணி நேரம் முன்
86 பார்வைகள்

இந்தியாவிலிருந்து திரும்பினால் தனக்கு மரண தண்டனை காத்திருக்கிறது என்ற போதிலும், டிசம்பர் மாதம் டாக்கா திரும்பும் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

மாணவர் போராட்டத்தால் பங்களாதேஷில் கடந்த ஆகஸ்ட் 2024 இல் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு கவிழ்க்கப்பட்டது. நாட்டை விட்டு தப்பிய அப்போதைய பிரதமர் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

இதன்பின் முகமது யூனுஸ் தலைமையில் அங்கு இடைக்கால அரசு அமைந்தது. தொடர்ந்து இந்த ஆண்டு பெப்ரவரியில் பொதுத் தேர்தலில் வென்று தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசு அமைந்தது.

இதனிடையே மாணவர் போராட்டத்தத்தின்போது அடக்குமுறையை கையாண்டு மனிதாபிமானதிற்கு எதிரான குற்றங்களை செய்ததாக ஷேக் ஹசீனா மீது வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை முடிவில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

மேலும், அவரை நாடு கடத்த கோரி பங்களாதேஷ், இந்தியாவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனிடையே சில மாதங்கள் முன்பு தான் டிசம்பரில் பங்களாதேஷ் திரும்ப உள்ளதாக ஹசீனா அறிவித்தார்.

இந்நிலையில், “மரணம்தான் என் தலைவிதி என்றால், என் சொந்த மண்ணில், என் சொந்த மக்களிடையே நான் இறக்க விரும்புகிறேன்” என்று செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு மின்னஞ்சல் மூலம் அளித்த பதிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது வருகையால் ஏற்படக்கூடிய அபாயங்களை அறிந்திருப்பதாகக் கூறிய ஹசீனா, “நான் திரும்பும்போது கைது செய்யப்படலாம், சித்திரவதை செய்யப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்பது எனக்குத் தெரியும்.

ஆனால், என் மக்கள் அனுபவிக்கும் துன்பத்தை என்னால் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

மெலனியா ட்ரம்புக்கு கிடைத்த உயரிய கௌரவம்!

ரஷ்யா – யுக்ரைன் போரால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்ட யுக்ரைனிய குழந்தைகளை மீட்டெடுத்தல் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்காக, அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்புக்கு யுக்ரைன் அரசு…

79 0 0
உலக செய்திகள்

ஈரானின் எஞ்சிய பகுதிகளையும் அழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரான் மீதான போரை மேலும் விரிவுபடுத்துவது குறித்து விரைவில் தீர்மானிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தேவை ஏற்பட்டால் ஈரானின் எஞ்சிய பகுதிகளையும் அழிக்க வேண்டிய…

92 0 0
உலக செய்திகள்

நியூசிலாந்தில் கூட்டம் கூட்டமாக உயி@ரிழந்த திமிங்கலங்கள்!

நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள கடற்கரையில் 50 இற்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் (Pilot Whales) ஒரே நேரத்தில் கரை ஒதுங்கி, பாறைகளில் மோதிப் பரிதாபமாக உயிரிழந்த…

86 0 0
உலக செய்திகள்

விர்ஜினியாவில் தன்பாலினத் திருமணத் தடையை நீக்கும் சட்டத் திருத்தம் பொது வாக்கெடுப்பில் வெற்றி!

அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலுடன் இணைந்து விர்ஜினியா மாகாணத்தில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், தன்பாலினத் திருமணத்திற்கான அரசியலமைப்புத் தடையை நீக்கும் சட்டத் திருத்தம் வெற்றிபெற்றுள்ளது.கடந்த 2006ஆம் ஆண்டு விர்ஜினியாவில்…

98 0 0