உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
7 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்று இடம்பெற்ற கோர விபத்து; மூவர் உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 29 நிமிடங்கள் முன்
72 பார்வைகள்

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் இன்று (7) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தில் இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மூவரே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த நால்வரும் தற்போது வரக்காப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில், கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி எதிர்த்திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் (SLTB) சொந்தமான பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்து தொடர்பாகப் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காயமடைந்த வேனின் சாரதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வரக்காப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மலையகத்தில் களைகட்டும் தீபாவளி வியாபாரம்.!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புத்தாடைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மலையகத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பெருமளவிலான மக்கள் ஹட்டன் உள்ளிட்ட பிரதான நகரங்களை…

83 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40 ஆவது ஆண்டு நிறைவு; “லீடர் அஷ்ரப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் போட்டி.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “லீடர் அஷ்ரப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று (07)வரிப்பத்தாஞ்சேனையில்…

77 0 0
இலங்கை செய்திகள்

திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பேருந்துகள்; சிக்கிய சாரதிகள், நடத்துநர்கள்.!

ஹட்டன் பேருந்து நிலையத்திலிருந்து குறுகிய மற்றும் நீண்ட தூரப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் இன்று (07) திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதேவேளை, ஹட்டன் நோக்கி…

84 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி நால்வர் மாயம்.!

தெனியாய, பெவரலிய பகுதியில் அமைந்துள்ள ஓடை ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுகேகொடையிலிருந்து குறித்த பகுதிக்கு சென்றிருந்த 7 பேர் கொண்ட…

86 0 0