உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
7 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பேருந்துகள்; சிக்கிய சாரதிகள், நடத்துநர்கள்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
85 பார்வைகள்

ஹட்டன் பேருந்து நிலையத்திலிருந்து குறுகிய மற்றும் நீண்ட தூரப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் இன்று (07) திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதேவேளை, ஹட்டன் நோக்கி வருகை தந்த பேருந்துகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்துச் சேவைகள் அதிகார சபையின் திடீர் சுற்றிவளைப்புப் பிரிவு அதிகாரிகளால் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் வழங்கப்பட்ட நடத்துநர் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இன்றி சேவையில் ஈடுபட்ட பேருந்துகள் அடையாளம் காணப்பட்டன.

அத்துடன், பயணிகள் போக்குவரத்துச் சேவைகள் அதிகார சபையின் பயண நேர அட்டவணை இன்றி இயக்கப்பட்ட பேருந்துகள் மற்றும் பயணிகளுக்குப் பயணச்சீட்டு வழங்காமல் சேவையில் ஈடுபட்ட பேருந்துகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வாறான குறைபாடுகளைக் கொண்டிருந்த பல பேருந்துகளுக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டதாக, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் திடீர் சுற்றிவளைப்புப் பிரிவின் பிரதம பரிசோதகர் சரத் சந்தன பண்டார விஜேசிங்க தெரிவித்தார்.

மேலும், பேருந்துகளின் டயர்களின் நிலைமை மற்றும் பாதுகாப்பற்ற முறையில் பொருத்தப்பட்டிருந்த மேலதிக உதிரிப்பாகங்கள் தொடர்பிலும் அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனர். பாதுகாப்பற்ற முறையில் பொருத்தப்பட்டிருந்த உதிரிப்பாகங்களை அகற்றுமாறும் சாரதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

தீபாவளிப் பண்டிகைக் காலம் நிறைவடையும் வரை இவ்வாறான திடீர் சோதனை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் பிரதம பரிசோதகர் சரத் சந்தன பண்டார விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மலையகத்தில் களைகட்டும் தீபாவளி வியாபாரம்.!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புத்தாடைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மலையகத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பெருமளவிலான மக்கள் ஹட்டன் உள்ளிட்ட பிரதான நகரங்களை…

83 0 0
இலங்கை செய்திகள்

இன்று இடம்பெற்ற கோர விபத்து; மூவர் உ**யிரிழப்பு.!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் இன்று (7) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்தில்…

72 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40 ஆவது ஆண்டு நிறைவு; “லீடர் அஷ்ரப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் போட்டி.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “லீடர் அஷ்ரப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று (07)வரிப்பத்தாஞ்சேனையில்…

77 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி நால்வர் மாயம்.!

தெனியாய, பெவரலிய பகுதியில் அமைந்துள்ள ஓடை ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுகேகொடையிலிருந்து குறித்த பகுதிக்கு சென்றிருந்த 7 பேர் கொண்ட…

87 0 0