நீரில் மூழ்கி நால்வர் மாயம்.!
தெனியாய, பெவரலிய பகுதியில் அமைந்துள்ள ஓடை ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுகேகொடையிலிருந்து குறித்த பகுதிக்கு சென்றிருந்த 7 பேர் கொண்ட குழுவினர், இன்று சனிக்கிழமை (7) பகல் பெவரலிய ஓடையில் நீராடியுள்ளனர்.
அப்போது அவர்களில் நால்வர் நீரில் மூழ்கிக் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல்போனவர்களைக் கண்டறிவதற்கான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.


