உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
7 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மெலனியா ட்ரம்புக்கு கிடைத்த உயரிய கௌரவம்!

உலக செய்திகள் 4 மணி நேரம் முன்
81 பார்வைகள்

ரஷ்யா – யுக்ரைன் போரால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்ட யுக்ரைனிய குழந்தைகளை மீட்டெடுத்தல் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்காக, அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்புக்கு யுக்ரைன் அரசு தனது உயரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

ரஷ்யா ஆக்கிரமித்துள்ள ஒலேஷ்கி பகுதியில் தற்காலிக போர்நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் இருதரப்புக்கும் இடையே மத்தியஸ்தம் செய்தார்.

இதன் விளைவாக, அப்பகுதியில் கடந்த ஒக்டோபர் மாதம் தற்காலிகப் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டு, உணவு மற்றும் மருத்துவமின்றி சிக்கியிருந்த யுக்ரைனிய மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மெலனியா ட்ரம்ப்பின் இத்தகைய உன்னத முயற்சியைப் பாராட்டி, யுக்ரைனின் உயரிய விருதுகளில் ஒன்றான ஒர்டர் ஒப் ஒல்கா, ஃபர்ஸ்ட் கிளாஸ்’ (Order of Princess Olga, 1st Class) விருதை யுக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்து வழங்கினார்.

போர்களுக்கு இடையே இதுபோன்ற அரிதான போர்நிறுத்தத்தை அமுல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டதுடன், ரஷ்ய – யுக்ரைன் பிரதிநிதிகளை அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேச்சுவார்த்தை மேற்கொள்வேன் என்றும் மெலனியா ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானின் எஞ்சிய பகுதிகளையும் அழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரான் மீதான போரை மேலும் விரிவுபடுத்துவது குறித்து விரைவில் தீர்மானிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தேவை ஏற்பட்டால் ஈரானின் எஞ்சிய பகுதிகளையும் அழிக்க வேண்டிய…

93 0 0
உலக செய்திகள்

நியூசிலாந்தில் கூட்டம் கூட்டமாக உயி@ரிழந்த திமிங்கலங்கள்!

நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள கடற்கரையில் 50 இற்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் (Pilot Whales) ஒரே நேரத்தில் கரை ஒதுங்கி, பாறைகளில் மோதிப் பரிதாபமாக உயிரிழந்த…

87 0 0
உலக செய்திகள்

“சொந்த மண்ணில் இறக்கவும் தயார்” – பங்களாதேஷ் செல்ல துணியும் ஷேக் ஹசீனா!!

இந்தியாவிலிருந்து திரும்பினால் தனக்கு மரண தண்டனை காத்திருக்கிறது என்ற போதிலும், டிசம்பர் மாதம் டாக்கா திரும்பும் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக்…

87 0 0
உலக செய்திகள்

விர்ஜினியாவில் தன்பாலினத் திருமணத் தடையை நீக்கும் சட்டத் திருத்தம் பொது வாக்கெடுப்பில் வெற்றி!

அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலுடன் இணைந்து விர்ஜினியா மாகாணத்தில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், தன்பாலினத் திருமணத்திற்கான அரசியலமைப்புத் தடையை நீக்கும் சட்டத் திருத்தம் வெற்றிபெற்றுள்ளது.கடந்த 2006ஆம் ஆண்டு விர்ஜினியாவில்…

98 0 0