நாடு கடத்தப்பட்ட கைவாரு முத்து கைது.!
ஷார்ஜாவில் வைத்து கைது செய்யப்பட்ட மனோஜ் முத்துகுமார எனும் ‘கைவாரு முத்து’ என்றழைக்கப்படும் சந்தேகநபர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


