உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
8 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொதுச் சுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 30,000 ரூபாய் அபராதம் விதிப்பு.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
87 பார்வைகள்

சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் பொதுச் சுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பாக 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதில் ரூ. 30,000 அபராதத் தொகை சம்மாந்தறை நீதிவான் நீதிமன்று விதித்துள்ளது.

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு பொதுச் சுகாதார அதிகாரி பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்பான வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை (6) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது குறித்த அபராதங்கள் சம்மாந்தறை நீதிவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மல்வத்தை பொதுச் சுகாதார அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் நுளம்புக் கட்டுப்பாட்டுச் சட்டம் மீறப்பட்ட 4 வழக்குகள் பதிவாகியதுடன் ஒவ்வொரு வழக்கிற்கும் தலா ரூ. 5,000 வீதம் மொத்தம் ரூ. 20,000 அபராதம் விதிக்கப்பட்டது. மல்வத்தை பொதுச் சகாதார அதிகாரி பிரிவில் இதுவரை 15 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பில் உடங்கா பொதுச் சுகாதார அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன் சம்மாந்துறை-01 பொதுச் சுகாதார அதிகாரி பிரிவில் சுகாதார ஒழுங்குவிதிகளை மீறிய 1 வழக்கிற்காக ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தமாகப் பதிவு செய்யப்பட்ட 6 வழக்குகளுக்கும் சேர்த்து ரூ. 30,000 அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உணவகங்கள் மற்றும் உணவு தயாரிப்பு நிலையங்களை நடத்துவோர் பின்வரும் சுகாதார நடைமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செல்லுபடியாகும் மருத்துவச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும், உணவைக் கையாளும் போது கட்டாயமாக கையுறை அணிய வேண்டும், உணவு தயாரிக்கும் இடங்களை எப்போதும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும், உணவகங்கள் மற்றும் உணவு தயாரிப்பு நிலையங்களில் சுகாதார நடைமுறைகள் தீவிரமாகப் பின்பற்றப்பட வேண்டும் என உணவுக் கையாளுபவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

மேற்படி அறிவுறுத்தல்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுவதுடன் உணவு தயாரிப்பு நிலையங்கள் தொடர்ந்து பரிசோதிக்கப்படும் எனவும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் எச்சரித்துள்ளது.

பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாப்பது அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும் என அவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

இது தவிர இப்பகுதியில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு முற்றாக இல்லாதொழிக்குமாறு சுகாதாரத் துறையினர் கடுமையாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கல்முனை மாநகரில் அதிகரிக்கும் குப்பைப் பிரச்சினை.!

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகளைக் கொட்டுவதைத் தடுக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் பலகைகள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, “இறைவனுக்காக இவ்விடத்தில் குப்பை கொட்ட…

91 0 0
இலங்கை செய்திகள்

மலையகத்தில் களைகட்டும் தீபாவளி வியாபாரம்.!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புத்தாடைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மலையகத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பெருமளவிலான மக்கள் ஹட்டன் உள்ளிட்ட பிரதான நகரங்களை…

99 0 0
இலங்கை செய்திகள்

இன்று இடம்பெற்ற கோர விபத்து; மூவர் உ**யிரிழப்பு.!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் இன்று (7) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்தில்…

83 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40 ஆவது ஆண்டு நிறைவு; “லீடர் அஷ்ரப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் போட்டி.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “லீடர் அஷ்ரப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று (07)வரிப்பத்தாஞ்சேனையில்…

88 0 0