உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
7 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நியூசிலாந்தில் கூட்டம் கூட்டமாக உயி@ரிழந்த திமிங்கலங்கள்!

உலக செய்திகள் 13 மணி நேரம் முன்
87 பார்வைகள்

நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள கடற்கரையில் 50 இற்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் (Pilot Whales) ஒரே நேரத்தில் கரை ஒதுங்கி, பாறைகளில் மோதிப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தின் வைராபரா (Wairarapa) பிராந்தியத்தில் அமைந்துள்ள ங்காயி (Ngawi) கடற்கரைப் பகுதியில், 50-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கூட்டமாக கரையை நோக்கி வந்துள்ளன. எதிர்பாராதவிதமாக, அங்குள்ள கூர்மையான மற்றும் கரடுமுரடான பாறைகளுக்கு இடையே அவை சிக்கிக்கொண்டதால், அலையின் வேகத்தில் பாறைகளில் மோதி உடலெங்கும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகின.

தகவல் அறிந்த கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகளும், ‘புராஜெக்ட் ஜோனா’ (Project Jonah) அமைப்பின் தன்னார்வ மருத்துவக் குழுவினரும், அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மாஓரி பழங்குடியின மக்களும் இணைந்து திமிங்கலங்களை மீட்கப் போராடினர்.

அவற்றை மீண்டும் ஆழமான கடல் பகுதிக்கு அனுப்ப முயன்ற போதிலும், பாறைகளில் மோதியதால் ஏற்பட்ட பலத்த காயங்கள் மற்றும் உடலில் நீர்ச்சத்து வேகமாக குறைந்ததன் காரணமாகப் பெரும்பாலான திமிங்கலங்கள் மூச்சடைத்து பரிதாபமாக உயிரிழந்தன.

உயிரிழந்த திமிங்கலங்களுக்கு உள்ளூர் மாஓரி மக்கள் தங்கள் பாரம்பரிய வழக்கப்படி பிரார்த்தனைகளைச் செலுத்தி, கண்ணீருடன் அடக்கம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தக் கடற்கரைப் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழ்ந்த மிகப்பெரிய திமிங்கல உயிரிழப்பு இதுவெனக் கடல்சார் உயிரின ஆர்வலர்கள் மிகுந்த கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

பைலட் திமிங்கலங்கள் பொதுவாகக் சமூகக் கட்டமைப்புடன் கூட்டமாக வாழும் இயல்புடையவை. கூட்டத்தில் ஒரு திமிங்கலத்திற்கு ஆபத்தோ அல்லது நோய் பாதிப்போ ஏற்பட்டு அது கரை ஒதுங்கும்போது, அதைத் தொடர்ந்து மற்ற திமிங்கலங்களும் கரையை நோக்கி வந்து சிக்கிக்கொள்வது வழக்கமாகும்.

மேலும், கடல் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள், எதிரொலி இருப்பிட கண்டறிதல் (Echolocation) திறன் குழப்பமடைதல் போன்றவையும் இத்தகைய விபத்துகளுக்குக் காரணமாக அமைவதாகக் கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

மெலனியா ட்ரம்புக்கு கிடைத்த உயரிய கௌரவம்!

ரஷ்யா – யுக்ரைன் போரால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்ட யுக்ரைனிய குழந்தைகளை மீட்டெடுத்தல் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்காக, அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்புக்கு யுக்ரைன் அரசு…

80 0 0
உலக செய்திகள்

ஈரானின் எஞ்சிய பகுதிகளையும் அழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரான் மீதான போரை மேலும் விரிவுபடுத்துவது குறித்து விரைவில் தீர்மானிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தேவை ஏற்பட்டால் ஈரானின் எஞ்சிய பகுதிகளையும் அழிக்க வேண்டிய…

92 0 0
உலக செய்திகள்

“சொந்த மண்ணில் இறக்கவும் தயார்” – பங்களாதேஷ் செல்ல துணியும் ஷேக் ஹசீனா!!

இந்தியாவிலிருந்து திரும்பினால் தனக்கு மரண தண்டனை காத்திருக்கிறது என்ற போதிலும், டிசம்பர் மாதம் டாக்கா திரும்பும் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக்…

86 0 0
உலக செய்திகள்

விர்ஜினியாவில் தன்பாலினத் திருமணத் தடையை நீக்கும் சட்டத் திருத்தம் பொது வாக்கெடுப்பில் வெற்றி!

அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலுடன் இணைந்து விர்ஜினியா மாகாணத்தில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், தன்பாலினத் திருமணத்திற்கான அரசியலமைப்புத் தடையை நீக்கும் சட்டத் திருத்தம் வெற்றிபெற்றுள்ளது.கடந்த 2006ஆம் ஆண்டு விர்ஜினியாவில்…

98 0 0