உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
8 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மலையகப் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் தேசிய மலையக பெண்கள் சம்மேளனத்தின் ஊடக சந்திப்பு

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
97 பார்வைகள்

பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்புடன் இணைந்து செயற்படும் தேசிய மலையகப் பெண்கள் சம்மேளனம், கடந்த 2026 நவம்பர் 02ஆம் திகதி கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்தியது.

இவ்வூடக சந்திப்பில், தற்போதைய சூழலில் மலையகப் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக, திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டு இன்றுவரை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மலையகப் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் விரிவாகக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன், மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமைகள், அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் தடைகள், கல்வி சார்ந்த பிரச்சினைகள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை வெறுமனே நிவாரண உதவிகளை வழங்குவதன் மூலம் மாத்திரம் தீர்க்க முடியாது. அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி, கௌரவமானதும் பாதுகாப்பானதுமான வாழ்க்கையை உருவாக்குவதற்கு அரசாங்கம் உள்ளிட்ட உரிய தரப்பினரின் தலையீடு அவசியமானது என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

மலையகப் பெண்களின் குரலை சமூகத்தில் வலுப்படுத்தி, அவர்களின் உரிமைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் தேசிய மட்டத்தில் கவனத்தை ஈர்ப்பதே இவ்வூடக சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்தது.

தோட்டங்களில் தொழில்புரியும் மற்றும் தோட்டப் பகுதிகளில் வாழும் பெண்கள், தமது கருத்துக்களைத் தைரியமாக முன்வைத்து ஊடகங்களின் முன்னிலையில் தோன்றி, தமது பிரச்சினைகளையும் உரிமைக் கோரிக்கைகளையும் உலகிற்கு எடுத்துரைக்கும் நிலைக்கு முன்னேறியிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியதாகும்.

மலையகப் பெண்கள் மௌனத்தைக் கலைத்து, தமது குரலைத் தாமே வெளிப்படுத்தி, சமூக மாற்றத்திற்கான தலைமைத்துவத்தை நோக்கி முன்னேறி வருவது பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பிற்கு மிகுந்த பெருமையளிக்கின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 30,000 ரூபாய் அபராதம் விதிப்பு.!

சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் பொதுச் சுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பாக 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதில் ரூ. 30,000 அபராதத் தொகை சம்மாந்தறை நீதிவான் நீதிமன்று விதித்துள்ளது.…

86 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை மாநகரில் அதிகரிக்கும் குப்பைப் பிரச்சினை.!

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகளைக் கொட்டுவதைத் தடுக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் பலகைகள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, “இறைவனுக்காக இவ்விடத்தில் குப்பை கொட்ட…

91 0 0
இலங்கை செய்திகள்

மலையகத்தில் களைகட்டும் தீபாவளி வியாபாரம்.!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புத்தாடைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மலையகத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பெருமளவிலான மக்கள் ஹட்டன் உள்ளிட்ட பிரதான நகரங்களை…

99 0 0
இலங்கை செய்திகள்

இன்று இடம்பெற்ற கோர விபத்து; மூவர் உ**யிரிழப்பு.!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் இன்று (7) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்தில்…

83 0 0