உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
4 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்திலிருந்து சத்யராஜ் நீக்கப்பட்டாரா? – வெளியாகியுள்ள புதிய தகவல்!

உலக செய்திகள் 1 மணி நேரம் முன்
74 பார்வைகள்

நடிகர் அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘டேர் டெவில்’ திரைப்படத்திலிருந்து நடிகர் சத்யராஜ் நீக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தனது ‘பிரேவ் ஹோர்ட்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் ஊடாகத் தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இப்படத்தில் அஜித்துடன் ஸ்ரீலீலா, பார்த்திபன் மற்றும் பிரபு ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, பார்த்திபன் ஏற்கவுள்ள கதாபாத்திரத்தில் சத்யராஜை நடிக்க வைக்க இயக்குநர் ஆதிக் திட்டமிட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது அரசியல் நடவடிக்கைகளை சத்யராஜும் அவரது மகள் திவ்யாவும் விமர்சித்து வருவதால், அஜித்தின் விருப்பத்தின் பேரில் சத்யராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக திரைப்படக் குழு தெரிவித்துள்ளது.

அஜித்துக்கும் விஜய்க்கும் இடையில் அண்மைக்காலமாக நெருக்கமான உறவு நிலவுவதாகக் கூறப்படும் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

எனக்கு உடன்பாடில்லாத மசோதாக்களை ஜனநாயகக் கட்சியினர் கொண்டுவந்தால், அவற்றை வீட்டோ அதிகாரத்தின் மூலம் நிராகரிப்பேன்!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியின் (Democrats) ஆதிக்கம் அதிகரிக்கும் நிலையில், தான் எதிர்க்கும் சட்டங்களை முடக்குவதற்கு ஜனாபதியின் ‘வீட்டோ’ (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தப்போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

70 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவின் புதிய தாக்குதலுக்கு எதிராக ஈரானின் “உயர் தடுப்புச் திட்டம்”

அமெரிக்காவினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு புதிய தாக்குதலுக்கும் எதிராக “உயர் தடுப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தை” (Maximum Deterrence) ஆயத்தப்படுத்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், பரந்த புவியியல் பிராந்தியங்கள்…

83 0 0
உலக செய்திகள்

ஸ்பெயின் தொடருந்து விபத்து: போக்குவரத்து அமைச்சர் பதவி விலகல்!

ஸ்பெயினில் 69 பேர் உயிரிழந்த தொடருந்து விபத்து இடம்பெற்று ஆறு நாட்களுக்குப் பின்னர், அந்தநாட்டின் போக்குவரத்து அமைச்சர் ஒஸ்கார் புவென்டே பதவி விலகியுள்ளார். கடந்த ஒக்ரோபர் 28ஆம்…

80 0 0
உலக செய்திகள்

வடகொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை?

வடகொரியா தனது கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதியை நோக்கி அடையாளம் காணப்படாத ஏவுகணை ஒன்றை ஏவியுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு இன்று (04)…

70 0 0