உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
4 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை? : தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு!

இந்திய செய்திகள் 1 மணி நேரம் முன்
88 பார்வைகள்

தமிழக தமிழிநாட்டில், வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்களை நெருங்கியுள்ள நிலையில், அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுமா என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக சட்டமன்றத்தில் மொத்தம் 234 உறுப்பினர்கள் உள்ள நிலையில், ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள 118 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும்.

2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 ஆசனங்களையும், திமுக கூட்டணி 73 ஆசனங்களையும், அதிமுக கூட்டணி 53 ஆசனங்களையும் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த மே 13ஆம் திகதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் அதிமுகவின் சில உறுப்பினர்களின் ஆதரவுடன் விஜய் அரசாங்கம் 144 வாக்குகளைப் பெற்று பெரும்பான்மையை நிரூபித்தது.

ஆறு மாதக் காலப்பகுதி நவம்பர் 13ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், திமுக அல்லது அதிமுக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எனினும், போதிய உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டாமல் பிரேரணையைக் கொண்டுவந்து தோல்வியடைந்தால், அது விஜய் அரசாங்கத்துக்குச் சாதகமாக அமையக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அதேவேளை, கடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுகவின் சில உறுப்பினர்கள் விஜய் அரசாங்கத்துக்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும் நிலையில், அந்த கட்சியின் உறுப்பினர்களை ஒருமித்த நிலைப்பாட்டில் வைத்திருப்பது தலைமையின் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரிகளின் ஆதரவு தொடர்ந்தால் விஜய் அரசாங்கம் தனது பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.

எனவே, எதிர்க்கட்சிகளின் அரசியல் நகர்வுகள், ஆதரவுக் கட்சிகளின் நிலைப்பாடு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்களிப்பு ஆகியவையே விஜய் அரசாங்கத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக அமையவுள்ளன என தமிழ் நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் முகேஷ் அம்பானி!

ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் நிகழ்நேர கோடீஸ்வரர்கள் பட்டியலின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 8 பில்லியன் டொலர் அல்லது 10.02 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்…

72 0 0
இந்திய செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழா இன்று!

தமிழ்நாட்டின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று…

76 0 0
இந்திய செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் கைப்பற்றல்.!

இராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் ரூ.90 இலட்சம் மதிப்பிலான 245 கிலோ பதப்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட கடலட்டைகளை சுங்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கடத்தல்காரர் வாகனத்தை விட்டுவிட்டு…

89 0 0
இந்திய செய்திகள்

டெல்லியில் தீபவளிக்கு பட்டாசு வெடிக்கலாம் : நீதிமன்றம் அனுமதி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, டெல்லி மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள தேசிய தலைநகர் பிராந்தியப் (Delhi-NCR) பகுதியில் நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் காலை 6…

99 0 0