உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
4 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அநுர அரசின் புதிய சட்டமூலம் அராஜக ஆட்சிக்கே வழிவகுக்கும்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
79 பார்வைகள்

அரசால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ நாட்டையோ அல்லது மக்களையோ பாதுகாப்பதற்குப் பதிலாக, அரசுக்கு எதிரான மாற்றுக் கருத்துகளை அடக்குவதற்கே வழிவகுக்கும் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா சாடினார்.

கொழும்பு, பிளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் ‘பயங்கரவாதம்’ என்பதற்குத் தெளிவான மற்றும் முறையான வரைவிலக்கணம் இதுவரை வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், அரசு கொண்டுவந்துள்ள 83 பக்கங்களைக் கொண்ட இந்தச் சட்டமூலத்தில் அனைத்து விடயங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

சட்டத்தின் உறுப்புரைகளில் ‘ஏதேனும்’ என்ற சொல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதன் மூலம், அரசுக்கு எதிராக முரண்பட்ட கருத்துகளைக் கொண்டிருப்பவர்களைப் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களாக வரைவிலக்கணப்படுத்த மறைமுக முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் சாடினார்.

இந்தச் சட்டமூலம் பிரஜைகளின் கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசனத்தின் 19ஆவது உறுப்புரையை முற்றிலும் மீறும் வகையில் அமைந்துள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், தெளிவான வரையறைகளின்றி ஜனாதிபதி விரும்பும் எந்தவொரு அமைப்பையும் தடை செய்வதற்கு இந்தச் சட்டம் வழிவகுக்கும் என்றும், இவ்வாறான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் நாட்டின் நிலைமை முற்றுமுழுதாக அராஜக நிலைக்குத் தள்ளப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் இடம்பெற்ற கோர விபத்து.!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அராலிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து…

75 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத போ*தைப்பொருள் பறிமுதல்; ஒருவர் கைது.!

இலங்கை கடற்படையினரும் கல்முனை மதுவரித் திணைக்கள அலுவலகமும் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக உடைமையில் வைத்திருந்த கஞ்சா மற்றும் புகையிலைக் கலவையினால் தயாரிக்கப்பட்டதாகச்…

74 0 0
இலங்கை செய்திகள்

பிரமிட் முறை நிதி நிறுவனத்தை நடத்தி நிதி மோசடி; இருவர் கைது.!

பிரமிட் முறை நிதி நிறுவனமொன்றை நடத்தி பொதுமக்களிடம் இருந்து நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்…

69 0 0
இலங்கை செய்திகள்

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன பதவி விலகத் தயார்.!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில், அவர் தனது பதவியிலிருந்து விலகுவதற்குத் தயாராக உள்ளார் என அறியமுடிகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின்…

78 0 0