உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
4 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சபாநாயகர் தவறிழைத்திருந்தால் கட்சியே அவரை நீக்கியிருக்கும்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
79 பார்வைகள்

“சபாநாயகர் தவறிழைத்திருந்தால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் வரை காத்திருக்காமல், ஆளுங்கட்சியே நிச்சயமாக நடவடிக்கை எடுத்திருக்கும்.”

இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபுண ஆராச்சி தெரிவித்தார்.

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கென உரிய நடைமுறைகள் உள்ளன. ஆனால், அந்த நடைமுறைகள்கூட நாட்டின் எதிர்க்கட்சியினருக்குத் தெரியவில்லை என்பது கவலையளிக்கின்றது.

பாடசாலைகளில் நடைபெறும் மாதிரி நாடாளுமன்ற அமர்வுகளில்கூட மாணவர்கள் பிரேரணைகளை மிகச் சிறப்பாக முன்வைக்கின்றனர்.

பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஏதேதோ காரணங்களைக் கூறுகின்றனர். குற்றச்சாட்டுகள் இருந்தால் அவற்றை முறையாகவும் தெளிவாகவும் முன்வைக்க வேண்டும். அதைவிடுத்து, தகாத வார்த்தைகளைக் குற்றச்சாட்டுகளாக முன்வைக்கக் கூடாது.

முறையான வகையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால், அதனை விவாதிப்பதற்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம்.

அதேபோன்று, சபாநாயகர் தவறிழைத்திருந்தால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் வரை காத்திருக்காமல், அதற்கு முன்னரே எமது கட்சி அவரைப் பதவியிலிருந்து நீக்கியிருக்கும். ஆனால், சபாநாயகர் எந்தவொரு தவறும் இழைக்கவில்லை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் இடம்பெற்ற கோர விபத்து.!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அராலிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து…

75 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத போ*தைப்பொருள் பறிமுதல்; ஒருவர் கைது.!

இலங்கை கடற்படையினரும் கல்முனை மதுவரித் திணைக்கள அலுவலகமும் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக உடைமையில் வைத்திருந்த கஞ்சா மற்றும் புகையிலைக் கலவையினால் தயாரிக்கப்பட்டதாகச்…

74 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசின் புதிய சட்டமூலம் அராஜக ஆட்சிக்கே வழிவகுக்கும்.!

அரசால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ நாட்டையோ அல்லது மக்களையோ பாதுகாப்பதற்குப் பதிலாக, அரசுக்கு எதிரான மாற்றுக் கருத்துகளை அடக்குவதற்கே வழிவகுக்கும் என்று முன்னாள்…

79 0 0
இலங்கை செய்திகள்

பிரமிட் முறை நிதி நிறுவனத்தை நடத்தி நிதி மோசடி; இருவர் கைது.!

பிரமிட் முறை நிதி நிறுவனமொன்றை நடத்தி பொதுமக்களிடம் இருந்து நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்…

69 0 0