உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
4 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைய முயன்ற இலங்கை இளைஞன் உட்பட நால்வர் கைது.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
77 பார்வைகள்

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே குந்துகால் கடல் பகுதியில், கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைய முயன்ற இலங்கை இளைஞனை கியூ பிரிவு பொலிஸார் மற்றும் மண்டபம் மரைன் பொலிஸார் இணைந்து கைது செய்தனர்.

அவரை நாட்டுப் படகில் ஏற்றி வந்து கரையில் இறக்கிவிட உதவிய மூவரையும் பொலிஸார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே உள்ள குந்துகால் ஆர்ச் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் கியூ பிரிவு பொலிஸார் மற்றும் மண்டபம் மரைன் பொலிஸார் இணைந்து கடலோர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாட்டுப் படகில் 3 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் வந்துள்ளனர்.

அந்தப் படகில் குந்துகால் குழந்தை இயேசு நகரைச் சேர்ந்த ராபர்ட் (40), பாம்பனைச் சேர்ந்த தினேஷ் (33) ஆகியோர் பொலிஸாரை கண்டதும் தப்பிச் ஓடினர்.

இதையடுத்து பொலிஸார் குந்துகால் ஆர்ச் பகுதியில் விரட்டிப் பிடிக்க முயன்றபோது, இலங்கையில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்ற இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த இளைஞன் கனிஸ்டன் மட்டும் பிடிபட்டார்.

பிடிபட்ட கனிஸ்டனிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், அவரது அண்ணன் துஷ்யந்தன் (32) கடந்த 2014ஆம் ஆண்டு கடவுச்சீட்டு மூலம் இலங்கையிலிருந்து இந்தியா வந்ததாகவும், தற்போது தமிழகத்தின் ஒட்டன்சத்திரம் தாலுகா விருப்பாச்சி பகுதியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது தாய் மகாலட்சுமி (53) பிரான்ஸ் நாட்டில் வசித்து வருவதாகவும், தனது தங்கை கணவர் மற்றும் குழந்தைகளுடன் இலங்கையில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையில் தனக்கு வழக்கு நிலுவையில் இருப்பதால் முறையாக விமானம் மூலம் இந்தியா வர முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், இதனால் கடல் வழியாக இந்தியா வருவதற்கு இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்த தனக்குத் தெரிந்த தானிஷ் அகமது என்பவரிடம் உதவி கேட்டதாகவும் கனிஸ்டன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தானிஷ் அகமது, இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டினத்தைச் சேர்ந்த கெவின் ராஜ் (33) என்பவரைத் தொடர்புகொண்டு, இலங்கையிலிருந்து ஒருவரை அனுப்பி வைப்பதாகவும், அவரை நாட்டுப் படகில் ஏற்றி வந்து பாம்பன் குந்துகால் கடற்கரையில் இறக்கிவிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்காக கனிஸ்டனின் அண்ணன் துஷ்யந்தன் படகுக் கூலியாக ரூ.40,000 வழங்கியதாகவும், கெவின் ராஜுக்கு உதவியாக அதே பகுதியைச் சேர்ந்த போலக் (26) என்பவரும் வந்ததாகவும் கனிஸ்டன் விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையே, தப்பியோடியவர்களைப் பிடிக்க கியூ பிரிவு பொலிஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் ஒட்டன்சத்திரத்தில் வசித்து வரும் இலங்கையைச் சேர்ந்த துஷ்யந்தன், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கெவின் ராஜ் மற்றும் போலக் ஆகிய 3 பேரையும் பொலிஸார் பிடித்தனர். அவர்களை மண்டபம் மரைன் பொலிஸ் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இலங்கையிலிருந்து கனிஸ்டனை தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கு உதவியதாகக் கூறப்படும் நபர்களின் செல்போன் எண்கள், தொடர்புகள் மற்றும் கடல் வழிப் பயணத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைய முயன்ற சம்பவத்தில், இலங்கை இளைஞர் மற்றும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் 3 பேர் பிடிபட்டுள்ள சம்பவம் இராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் இடம்பெற்ற கோர விபத்து.!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அராலிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து…

75 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத போ*தைப்பொருள் பறிமுதல்; ஒருவர் கைது.!

இலங்கை கடற்படையினரும் கல்முனை மதுவரித் திணைக்கள அலுவலகமும் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக உடைமையில் வைத்திருந்த கஞ்சா மற்றும் புகையிலைக் கலவையினால் தயாரிக்கப்பட்டதாகச்…

74 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசின் புதிய சட்டமூலம் அராஜக ஆட்சிக்கே வழிவகுக்கும்.!

அரசால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ நாட்டையோ அல்லது மக்களையோ பாதுகாப்பதற்குப் பதிலாக, அரசுக்கு எதிரான மாற்றுக் கருத்துகளை அடக்குவதற்கே வழிவகுக்கும் என்று முன்னாள்…

79 0 0
இலங்கை செய்திகள்

பிரமிட் முறை நிதி நிறுவனத்தை நடத்தி நிதி மோசடி; இருவர் கைது.!

பிரமிட் முறை நிதி நிறுவனமொன்றை நடத்தி பொதுமக்களிடம் இருந்து நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்…

69 0 0