உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
4 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

எதிர்க்கட்சியின் கூச்சல்களுக்கு அரசு ஒருபோதும் அடிபணியாது.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
72 பார்வைகள்

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளின் பிரகாரம் நம்பிக்கையில்லாப் பிரேரணையையொன்றை எவ்வாறு சமர்ப்பிப்பது என்றுகூட எதிர்க்கட்சிக்குத் தெரியவில்லை என்றும், நிலையியல் கட்டளைகளுக்கு அமையச் சபாநாயகருக்கு எதிராக முறைப்படியான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தால் அதனை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளத் தயாராக உள்ளோம் என்றும் ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சபையின் நடுவே திரண்டுவந்து கூச்சலிடுகின்றார்கள். ஆனால் எதிர்க்கட்சிகளின் இத்தகைய கூச்சலுக்கு அடிபணிந்து சபை நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் ஒத்திவைக்கப் போவதில்லை.

நிலையியல் கட்டளைகளின்படி சபாநாயகருக்கு எதிராக முறைப்படியான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தால், அதனை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம்.

கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே எதிர்க்கட்சியினர் சபையில் கூச்சலிட்டு அமளியில் ஈடுபடுகின்றனர். இவர்களின் இத்தகைய கூச்சல்களுக்கு நாம் ஒருபோதும் அச்சமடையப் போவதில்லை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் இடம்பெற்ற கோர விபத்து.!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அராலிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து…

75 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத போ*தைப்பொருள் பறிமுதல்; ஒருவர் கைது.!

இலங்கை கடற்படையினரும் கல்முனை மதுவரித் திணைக்கள அலுவலகமும் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக உடைமையில் வைத்திருந்த கஞ்சா மற்றும் புகையிலைக் கலவையினால் தயாரிக்கப்பட்டதாகச்…

74 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசின் புதிய சட்டமூலம் அராஜக ஆட்சிக்கே வழிவகுக்கும்.!

அரசால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ நாட்டையோ அல்லது மக்களையோ பாதுகாப்பதற்குப் பதிலாக, அரசுக்கு எதிரான மாற்றுக் கருத்துகளை அடக்குவதற்கே வழிவகுக்கும் என்று முன்னாள்…

78 0 0
இலங்கை செய்திகள்

பிரமிட் முறை நிதி நிறுவனத்தை நடத்தி நிதி மோசடி; இருவர் கைது.!

பிரமிட் முறை நிதி நிறுவனமொன்றை நடத்தி பொதுமக்களிடம் இருந்து நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்…

69 0 0