உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
2 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள்!

இந்திய செய்திகள் 7 மணி நேரம் முன்
78 பார்வைகள்

டெல்லியில் காற்றுத் தரம் பொதுவாக மோசமடையும் குளிர்கால காலம் நெருங்கி வரும் நிலையில், அங்கு காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதன்படி, நவம்பர் 1 ஆம் திகதி முதல், பாரத் நிலை 6 மாசு உமிழ்வு தரநிலை  (BS-VI) உமிழ்வுத் தரநிலைகளைப் பூர்த்தி செய்யாத வாகனங்கள் (குறிப்பிட்ட விலக்குகளுக்கு உட்பட்டு) தேசிய தலைநகருக்குள் நுழைய அனுமதிக்கப்படாது. 

இந்தத் தடை 2027 ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.

பாரத் நிலை 6 மாசு உமிழ்வு தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் வாகனங்கள் கூட, டெல்லிக்குள் நுழையும்போது செல்லுபடியாகும் ‘மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழை’ (PUCC) கொண்டிருக்க வேண்டும்.

இல்லையெனில், நகரத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அவற்றுக்கு எரிபொருள் வழங்கப்படாது.

இருப்பினும், மின்சார மற்றும் சிஎன்ஜி வாகனங்கள், அத்துடன் அம்பியூலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் போன்ற குறிப்பிட்ட அவசரகால மற்றும் அலுவல் பணிகளுக்கான வாகனங்களுக்கு இந்தக் குறிப்பிட்ட கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், டெல்லிக்கு வெளியே பதிவுசெய்யப்பட்ட பிஎஸ்-VI தரத்திற்கு இணக்கமான வாகனங்கள் தொடர்ந்து நுழையலாம்.

இதேவ‍ேளை, தேசிய தலைநகர் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை எதிர்கொள்ள, டெல்லி அரசு குளிர்காலத்திற்கான குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை அமுல்படுத்துகிறது.

இவை இன்று (01) முதல் நடைமுறைக்கு வருகின்றன. 

2026 நவம்பர் 1 முதல் 2027 பெப்ரவரி 28 வரையிலான காலகட்டத்தில், பல்வேறு கட்டுப்பாடுகள் வெவ்வேறு கால அளவுகளில் அமுலில் இருக்கும். 

மேலும், 2026 டிசம்பர் 10 முதல் 2027 ஜனவரி 20 வரை, சில குறிப்பிட்ட விலக்குகளைத் தவிர, கட்டுமான மற்றும் இடிப்புப் பணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படும்.

குளிர்காலத்தின் உச்சக்கட்ட மாதங்களில், வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையைக் குறைக்கவும், தூசியைக் கட்டுப்படுத்தவும், சாலைப் போக்குவரத்தைக் குறைக்கவும் இந்தத் திட்டம் நோக்கம் கொண்டுள்ளது.

அன்றாடப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, அலுவலக நேரங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 

இதன்படி, 2027 பெப்ரவரி 28 ஆம் திகதி வரை, டெல்லி அரசு அலுவலகங்கள் காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரையிலும், டெல்லி மாநகராட்சி அலுவலகங்கள் காலை 8:30 மணி முதல் மாலை 5:00 மணி வரையிலும் செயல்படும். 

மேலும், தனிநபர் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், மாநகராட்சிக்குச் சொந்தமான அங்கீகரிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களில், 2027 பெப்ரவரி 28-ஆம் திகதி வரை பார்க்கிங் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

முரசு புயலின் அச்சம் : சென்னையில் 11 விமானங்கள் இரத்து!

முரசு’ (Murasu) சூறாவளி காரணமாக இன்று (02) சென்னை விமான நிலையத்திற்கு வருகை தரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் மொத்தம் பதினொரு விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த…

78 0 0
இந்திய செய்திகள்

ஆந்திராவை நெருங்கும் ‘முரசு’ – 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்!

திங்கட்கிழமை (நவம்பர் 2) அதிகாலை வேளையில், மேற்கு-மத்திய மற்றும் தென்மேற்கு வங்கக் கடற்பகுதியில் நிலைகொண்டிருந்த ‘முரசு’ (Murasu) சூறாவளி, தீவிர சூறாவளியாக வலுவடைந்தது. இந்த வளிமண்டல அமைப்பு…

78 0 0
இந்திய செய்திகள்

தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கு ஒளிவிளக்கு! – தமிழக முதல்வர் விஜய் தெரிவிப்பு

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டுத் தமிழ்நாடு மாநிலம் உருவான நவம்பர் 1 ஆம் திகதியை முன்னிட்டு, தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் விஜய் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க…

90 0 0
இந்திய செய்திகள்

வருங்காலத்தில் தமிழர் ஒருவர்இந்தியாவின் பிரதமராவது உறுதி : துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் அதிரடி கணிப்பு

இந்தியாவில் தமிழர் ஒருவர் பிரதமராவதற்கு நிச்சயம் வாய்ப்புகள் உள்ளன என்றும், வருங்காலத்தில் தமிழர் ஒருவர் இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்பது உறுதி என்றும் இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி.…

104 0 0