உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
2 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

புளோரிடாவில் வணிகப் பயன்பாட்டு வானூர்தி விபத்து: 9 பேர் பரிதாபமாக ப@லி

உலக செய்திகள் 8 மணி நேரம் முன்
84 பார்வைகள்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் வணிகப் பயன்பாட்டு ஜெட் வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் பகுதியிலிருந்து பஹாமாஸ் நோக்கிப் பயணித்த ‘லியர் ஜெட் 60’ (Learjet 60) ரக வானூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

புளோரிடா மாகாணத்தின் பாம் பீச் கவுண்டி (Palm Beach County) பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிக்கும் பிரதான சாலைக்கும் இடைப்பட்ட இடத்தில் வானூர்தி திடீரென செங்குத்தாகக் கீழே விழ்ந்து (Nose-dive) பெரும் தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தின் போது அந்த பகுதியில் கடுமையான பனிமூட்டம் மற்றும் தீவிர காற்றழுத்தம் நிலவியதாக வானூர்தி நிலைய கட்டுப்பாட்டு அறைப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தத் திடீர் விபத்தினால் அந்தப் பகுதியில் பெரும் தீப்பற்றி எரிந்ததுடன் கரும்புகையும் சூழ்ந்தது. எனினும், வானூர்தி திறந்தவெளியில் விழ்ந்ததால் அருகிலிருந்த வீடுகளுக்குச் சேதம் எதுவுமின்றி பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பான தகவலை அமெரிக்கப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் சீன் டஃபி உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய அமெரிக்க தேசிய போக்குவரத்துப் பாதுகாப்புச் சபை (NTSB) மற்றும் கூட்டாட்சி வான்போக்குவரத்து நிர்வாகம் (FAA) ஆகியவை இணைந்து தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

இஸ்ரேலில் நெதன்யாகுவை வெளியேற்றும் போராட்டங்கள் தீவிரம்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, அந்த நாட்டின் ஐந்து முக்கிய நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள்…

89 0 0
உலக செய்திகள்

புடின் ஒரு நிஜ வாழ்க்கை வில்லன் – ஸ்டீபன் ஹார்பர் விமர்சனம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மிகவும் புத்திசாலி மற்றும் கடின உழைப்பாளி என்றாலும், அவர் ஒரு தீவிரமான சூழ்ச்சிக்காரர் என்றும், “உண்மையிலேயே தீயவர்” (Truly Evil) என்றும்…

80 0 0
உலக செய்திகள்

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: இதுவரை 4.3 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிப்பு!

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இதுவரை 4.3 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப்…

107 0 0
உலக செய்திகள்

செய்தியாளரை உருவக்கேலி செய்த ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், செய்தியாளர் ஒருவரை ‘அருவருப்பானவர்’ எனக் குறிப்பிட்டு, அவரது உடல் தோற்றம் குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார். தென் கரோலினாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்…

116 0 0