உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
1 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கனகபுரம் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் ஏற்பாடுகள் இன்று ஆரம்பம் : சிறீதரன் எம்.பியும் பங்கேற்பு

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
78 பார்வைகள்

தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான ஆரம்ப நாள் நிகழ்வும், அது தொடர்பான விசேட கலந்துரையாடலும் கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி நினைவுகூரப்படவுள்ள தமிழ்த் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு, துயிலும் இல்லப் பகுதிகளைச் சீரமைத்தல் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகளைச் செவ்வனே ஒருங்கிணைத்தல் தொடர்பில் ஆராயும் நோக்கிலேயே இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு ஆரம்பக் கட்டப் பணிகளையும் கலந்தாலோசனைகளையும் தொடக்கி வைத்தார்.

அவருடன் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், மாவீரர்களின் பெற்றோர்கள், தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் தொடர்ச்சியாக இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது,

துயிலும் இல்ல வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணிகளை முடுக்கிவிடுதல், எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள முதன்மை நினைவேந்தல் நிகழ்வுக்கான உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காட்டு யானை தாக்கி 76 வயது முதியவர் பரிதாபமாக உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலஹேனா பகுதியில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  இன்று(1)  காலை  இடம்பெற்ற…

65 0 0
இலங்கை செய்திகள்

ரணில் – சஜித் கை கோர்த்தாலும் எமது அரசை அசைக்க முடியாது! – அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் ஒன்றாகக் கைகோர்த்தாலும் எமது தேசிய மக்கள் சக்தி அரசை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என்று அமைச்சர்…

80 0 0
இலங்கை செய்திகள்

புதிய இரு சட்டங்கள் மூலம் மக்கள் மீது திட்டமிட்டு அரச பயங்கரவாதம் திணிப்பு!: சஜித் குற்றச்சாட்டு

நாட்டில் இரு புதிய சட்டமூலங்களைக் கொண்டுவந்து, அரசு சட்டபூர்வமான முறையில் மக்கள் மீது அரச பயங்கரவாதத்தைத் திணிக்க முயல்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடும்…

67 0 0
இலங்கை செய்திகள்

சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி வலி. வடக்கில் மக்கள் வீதிப்போராட்டம்!

முப்படை வசமுள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி வலிகாமம் வடக்கு மக்கள் பலாலி சந்தி மற்றும் வசாவிளான் சந்தி ஆகியவற்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்புப்…

76 0 0