உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
1 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கோலாகலமாக நடைபெற்ற வேலணை மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழாவும், கல்லூரி தினமும்!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
84 பார்வைகள்

வேலணை மத்திய கல்லூரியின் கல்லூரித்தினமும் பரிசளிப்பு விழாவும் இன்று (01.11.2026) ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.

கல்லூரியின் சேர். வைத்திலிங்கம் துரைச்சுவாமி மண்டபத்தில், கல்லூரி முதல்வர் திருமதி த. சியோதாரணி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பிரதம விருந்தினராக தர்கா நகர் கல்வியியற் கல்லூரியின் உப பீடாதிபதியும் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் உப செயலாளருமான தனபாலன் தனேந்திரன் கலந்து சிறப்பித்தார்.

விழாவின் ஆரம்ப நிகழ்வாகக் கல்லூரியின் நுழைவாயிலில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்திலும், கல்லூரி வளாகத்திலுள்ள நடராஜப் பெருமான் சந்நிதியிலும் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி சிலைக்கு மலர் மாலை அணிவித்து வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனையடுத்து விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், கல்லூரி மாணவர்களின் மேற்கத்தேய இசைக்குழுவின் வாத்திய இசை முழங்க, விருந்தினர்கள் நுழைவாயிலிலிருந்து கொடியேற்றும் சதுக்கம் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேசியக் கொடியை பிரதம விருந்தினர் தனபாலன் தனேந்திரனும், கல்லூரிக் கொடியை முதல்வர் திருமதி த. சியோதாரணியும் ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து விழா மண்டபத்திற்கு விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டு, மதத் தலைவர்களின் ஆசியுரைகளுடன் பிரதான நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தீவக வலயக் கல்வி அலுவலகத்தின் கல்வி அபிவிருத்திப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ப. கணேசன் கலந்து சிறப்பித்தார்.

மேலும், கௌரவ விருந்தினர்களாக கிளிநொச்சி செல்வநகர் வித்தியாலய அதிபர் சி. மகேந்திரராசா, லண்டன் பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளர் தி. மகேந்திரன், வேலணை ஆர்.ஜி. பிரதர்ஸ் ஸ்டோர்ஸ் முகாமையாளர் வி.க. ஐருபன், வேலணை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் இ. சிவநாதன் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் சு. கஜேந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்லூரியின் கல்வி, கலை, கலாசார மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இவ்விழா, கல்லூரி சமூகத்தினருக்கும் பழைய மாணவர்களுக்கும் இடையிலான உறவையும் ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

தொடர்ந்து மாணவர்களின் கல்வி மற்றும் இதர செய்ற்பாடுகளையும் சாதனைகளையும் பாராட்டி கௌரவிக்கும் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி வலி. வடக்கில் மக்கள் வீதிப்போராட்டம்!

முப்படை வசமுள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி வலிகாமம் வடக்கு மக்கள் பலாலி சந்தி மற்றும் வசாவிளான் சந்தி ஆகியவற்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்புப்…

67 0 0
இலங்கை செய்திகள்

கனகபுரம் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் ஏற்பாடுகள் இன்று ஆரம்பம் : சிறீதரன் எம்.பியும் பங்கேற்பு

தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான ஆரம்ப நாள் நிகழ்வும், அது தொடர்பான விசேட கலந்துரையாடலும் கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை…

68 0 0
இலங்கை செய்திகள்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயற்குழுக் கூட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றது

தமிழர் விடுதலைக்கூட்டணியின் கிளிநொச்சி செயற்பாட்டாளர்களுக்கும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரிக்கும் இடையிலான கலந்துரையாடல் தமிழர்  விடுதலைக்கூட்டணியின் கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து…

74 0 0
இலங்கை செய்திகள்

வவுனியா ஆற்றுச்சருக்கை, கொங்கிறீட் வீதி மற்றும் மதகுகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்து வைப்பு!

வவுனியா மாவட்டம், பிரமனாலங்குளம்–பரப்புக்கடந்தான் வீதியின் 5.55ஆவது கிலோமீற்றரில் அமைந்துள்ள பெரியதம்பனைப் பகுதியில், 40.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஆற்றுச்சருக்கை, கொங்கிறீட் வீதி மற்றும் மதகுகளை வடக்கு…

93 0 0