உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
31 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வீதிகளை சீரமைக்குமாறு ரவிகரன் எம்.பியிடம் மக்கள் கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
72 பார்வைகள்

புதுக்குடியிருப்பு மேற்கு 04ஆம் வட்டாரம் கிராம அலுவலர் பிரிவில், பிரதேச செயலாளரின் விடுதிக்கு எதிரே உள்ள முதலாம் ஒழுங்கை மற்றும் புதுக்குடியிருப்பு 08ஆம் வட்டாரம், மந்துவிலில் குழந்தையேசு கோவில் வீதியின், 02ஆம் குறுக்குத்தெரு வீதியிலுள்ள 400 மீற்றர் தூரமான வலதுபக்க இரண்டாம் ஒழுங்கை என்பன சீரற்றுக் காணப்படுவதால் தாம் பலத்த போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராச ரவிகரன் அவர்களிடம் முறையீடு செய்துள்ளனர்.

குறிப்பாக பாடசாலை மாணவர்கள், வைத்தியசாலைக்கு செல்பவர்கள், பிரதேச செயலகத்திற்கு செல்பவர்கள், விவசாய நடவடிக்கைகளுக்குச் செல்பவர்கள் என பலதரப்பட்டவர்களும் பலத்த சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் சீரின்றிக் காணப்படுகின்ற குறித்த வீதிகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன், மக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைபாடுகளையும் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த வீதிகளைச் சீரமைப்பது தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வாகனத்தைக் கடத்த முயன்றவர்களில் ஒருவர் கைது.!

வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றை, அதன் உரிமையாளரின் அனுமதியின்றி எடுத்துச் செல்ல முயன்ற இருவரில் ஒருவர் நானுஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா, நானுஓயா, பிளாக்பூல் பகுதியில்…

77 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 18 ஆம் மைல்கல் பகுதியில் சட்டவிரோத மதுபானத்தைக் கார் ஒன்றில் ஏற்றிச் சென்ற சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (30) கட்டுநாயக்க பொலிஸாரால்…

76 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையர் என்ற தொனிக்குள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.!

இன ரீதியாக மொழி ரீதியாக நாங்கள் பிரிந்து நின்றது போதும். நாங்கள் ஒன்றிணைந்த இலங்கையர் என்ற தொனிக்குள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட…

81 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவுக்கு நேர்ந்ததே அநுர அரசுக்கும் நடக்கும்.!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதைப் போன்றே, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகவும் மக்கள் வீதிகளில் இறங்கி கிளர்ந்தெழும் சூழல் உருவாகியுள்ளது என்று…

73 0 0