உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
31 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

காதல் விவகாரம்; இளைஞன் கொ**லை.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
91 பார்வைகள்

காலி, இக்கடுவைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று வெள்ளிக்கிழமை புகுந்த இனந்தெரியாத நபர்கள், இளைஞன் ஒருவரை வாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் இக்கடுவைப் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை உந்துருளியில் வந்த இருவர், மேற்படி இளைஞரின் வீட்டுக்குள் நுழைந்து அவர் மீது வாளால் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியானதை அடுத்து, தாக்குதலை நடத்திய நபர்கள் அங்கிருந்து உந்துருளியில் தப்பியோடியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாடே இந்தப் படுகொலைக்குப் பிரதான காரணம் எனத் தெரியவந்துள்ளது.

கொலையாளிகளைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீதிகளை சீரமைக்குமாறு ரவிகரன் எம்.பியிடம் மக்கள் கோரிக்கை.!

புதுக்குடியிருப்பு மேற்கு 04ஆம் வட்டாரம் கிராம அலுவலர் பிரிவில், பிரதேச செயலாளரின் விடுதிக்கு எதிரே உள்ள முதலாம் ஒழுங்கை மற்றும் புதுக்குடியிருப்பு 08ஆம் வட்டாரம், மந்துவிலில் குழந்தையேசு…

60 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 18 ஆம் மைல்கல் பகுதியில் சட்டவிரோத மதுபானத்தைக் கார் ஒன்றில் ஏற்றிச் சென்ற சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (30) கட்டுநாயக்க பொலிஸாரால்…

72 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையர் என்ற தொனிக்குள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.!

இன ரீதியாக மொழி ரீதியாக நாங்கள் பிரிந்து நின்றது போதும். நாங்கள் ஒன்றிணைந்த இலங்கையர் என்ற தொனிக்குள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட…

77 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவுக்கு நேர்ந்ததே அநுர அரசுக்கும் நடக்கும்.!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதைப் போன்றே, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகவும் மக்கள் வீதிகளில் இறங்கி கிளர்ந்தெழும் சூழல் உருவாகியுள்ளது என்று…

71 0 0