உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
31 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தாயுடன் தகாத உறவில் இருந்த நபரால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
89 பார்வைகள்

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை மற்றும் சிறுமியை பணத்திற்காக விற்பனை செய்தமை தொடர்பில் பாணதுறை மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சிறுமியின் தாயாருடன் தாகாத தொடர்பினை பேணிவந்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து பிரதிவாதிக்கு 30 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து பாணந்துறை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்கு விசாரணைகள் பாணந்துறை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 24 ஆம் திகதி வழக்கு மீதான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

இதன்போது, பிரதிவாதியான சிறுமியின் தாயுடன் தகாத உறவிணை பேணிவந்த நபருக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்த 2 குற்றச்சாட்டுகளுக்கும் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதற்கமைய, முதல் குற்றச்சாட்டிற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3,000 ரூபாய் அபராதமும், இரண்டாவது குற்றச்சாட்டிற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

குறித்த தண்டப்பணத்தைச் செலுத்தத் தவறும்பட்சத்தில் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தனித்தனியாக ஒரு மாதம் வீதம் மேலும் 2 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டு குற்றச்சாட்டுகளுக்குமாக மொத்தம் 5 இலட்சம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறு பிரதிவாதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த இழப்பீட்டு தொகையை செலுத்தத் தவறும்பட்சத்தில் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 18 மாதங்கள் வீதம் மேலும் 3 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீதிகளை சீரமைக்குமாறு ரவிகரன் எம்.பியிடம் மக்கள் கோரிக்கை.!

புதுக்குடியிருப்பு மேற்கு 04ஆம் வட்டாரம் கிராம அலுவலர் பிரிவில், பிரதேச செயலாளரின் விடுதிக்கு எதிரே உள்ள முதலாம் ஒழுங்கை மற்றும் புதுக்குடியிருப்பு 08ஆம் வட்டாரம், மந்துவிலில் குழந்தையேசு…

60 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 18 ஆம் மைல்கல் பகுதியில் சட்டவிரோத மதுபானத்தைக் கார் ஒன்றில் ஏற்றிச் சென்ற சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (30) கட்டுநாயக்க பொலிஸாரால்…

72 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையர் என்ற தொனிக்குள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.!

இன ரீதியாக மொழி ரீதியாக நாங்கள் பிரிந்து நின்றது போதும். நாங்கள் ஒன்றிணைந்த இலங்கையர் என்ற தொனிக்குள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட…

77 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவுக்கு நேர்ந்ததே அநுர அரசுக்கும் நடக்கும்.!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதைப் போன்றே, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகவும் மக்கள் வீதிகளில் இறங்கி கிளர்ந்தெழும் சூழல் உருவாகியுள்ளது என்று…

71 0 0