உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
31 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

முத்துராஜவெல, நீர்கொழும்பு களப்புச் சுற்றாடல் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணுங்கள்.!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
90 பார்வைகள்

முத்துராஜவெல, நீர்கொழும்பு களப்பு மற்றும் கம்பஹா மாவட்டம் சார்ந்த சுற்றாடல் பிரச்சினைகளைக் கண்டறிதல் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

முத்துராஜவெல சதுப்புநிலப் பகுதிகள், பமுனுகம கடற்கரை பகுதிகளில் சூழல் மாசடைதல் மற்றும் சீதுவ லியனகேமுல்ல தொழிற்சாலைகள் சார்ந்த சிக்கல்கள் ஆகியவை தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இதன்படி, இந்தப் பகுதிகளில் இடம்பெறும் சூழல் மாசடைதலைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

குறித்த சுற்றாடல் பிரச்சினைகளுக்கு நிலைபேறான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகளை உள்ளடக்கிய குழுக்களை ஸ்தாபிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஆயர் ஜே. டி. அந்தனி, அருட்தந்தை சிரில் காமினி, அருட்தந்தை நிலந்த ஹேஷான், நாடாளுமன்ற உறுப்பினர்களான லசித் பாஷண கமகே, ஸ்டெபனி பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் ஜே.எம்.விஜேபண்டார, சுற்றாடல் அமைச்சின் நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் கலாநிதி எம்.ஜி.எம். பிரசன்ன, சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) டி.பி.சி.உதய குமார, சுற்றாடல் அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) ஐ.டப்லியூ.பி.சேனாரத்ன ஆகியோருடன் அரச அதிகாரிகள், கத்தோலிக்க அருட்தந்தைமார் உட்பட பலர் இதன்போது கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீதிகளை சீரமைக்குமாறு ரவிகரன் எம்.பியிடம் மக்கள் கோரிக்கை.!

புதுக்குடியிருப்பு மேற்கு 04ஆம் வட்டாரம் கிராம அலுவலர் பிரிவில், பிரதேச செயலாளரின் விடுதிக்கு எதிரே உள்ள முதலாம் ஒழுங்கை மற்றும் புதுக்குடியிருப்பு 08ஆம் வட்டாரம், மந்துவிலில் குழந்தையேசு…

60 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 18 ஆம் மைல்கல் பகுதியில் சட்டவிரோத மதுபானத்தைக் கார் ஒன்றில் ஏற்றிச் சென்ற சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (30) கட்டுநாயக்க பொலிஸாரால்…

72 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையர் என்ற தொனிக்குள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.!

இன ரீதியாக மொழி ரீதியாக நாங்கள் பிரிந்து நின்றது போதும். நாங்கள் ஒன்றிணைந்த இலங்கையர் என்ற தொனிக்குள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட…

77 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவுக்கு நேர்ந்ததே அநுர அரசுக்கும் நடக்கும்.!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதைப் போன்றே, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகவும் மக்கள் வீதிகளில் இறங்கி கிளர்ந்தெழும் சூழல் உருவாகியுள்ளது என்று…

72 0 0