உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக மனித உரிமைகள் கண்காணிப்பகம் பாய்ச்சல்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
75 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை மீறி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மோசமான அம்சங்களைக் கொண்ட அடக்குமுறைச் சட்டங்களையே மீண்டும் கொண்டுவருவதாகச் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம்’ மற்றும் ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ ஆகியன தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள முக்கிய அம்சங்கள்:-

வாக்குறுதி மீறல்
“2024ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சகல ஒடுக்குமுறைச் சட்டங்களையும் இரத்துச் செய்வதாகவும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி மக்களின் சிவில் உரிமைகளை உறுதி செய்வதாகவும் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலங்கள் இரண்டும் பழைய சட்டத்தின் மிக மோசமான மீறல்களையே மீண்டும் பிரதிபலிக்கின்றன.

சித்திரவதைகளுக்கான வழிவகை
போதிய நீதித்துறை மேற்பார்வையோ அல்லது தெளிவான சான்றுகளோ இன்றி நீண்டகாலத் தடுப்புக்காவலுக்கு இப் புதிய சட்டமூலம் இடமளிக்கிறது.

மேலும், பொலிஸாரால் பெறப்படும் வாக்குமூலங்களைச் சான்றாகப் பயன்படுத்துவதற்கு அனுமதிப்பதன் மூலம் பொலிஸ் சித்திரவதைகள் தொடர்வதற்கு அரசே வழிகோலுகின்றது.

சட்டப் பாதுகாப்புகள் நீக்கம்
சர்வதேச நியமங்களான தெளிவு மற்றும் சட்டபூர்வ ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தத் தவறியுள்ள இந்தச் சட்டமூலம், நாட்டின் சாதாரண குற்றவியல் சட்டத்தின் அடிப்படைப் பாதுகாப்புகளையும் நீக்கியுள்ளது.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைக்கு ஆபத்து
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்கான முதன்மை நிபந்தனைகளில் ஒன்றாகப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவது காணப்படுகின்றது.

எனினும், அந்தச் சட்டத்தின் கடுமையான அம்சங்களைத் தொடர்ந்து தக்கவைத்துள்ள புதிய ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம்’, ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பலவீனப்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆதலால், முறையான கலந்தாலோசனைகள் இன்றி அவசரமாக வரைவு செய்யப்பட்டுள்ள இந்தப் புதிய சட்டமூலத்தை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.” – என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மக்களின் பலத்தினால் மட்டுமே இந்த அரசை வீழ்த்த முடியும்.!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையிலான இந்த மக்கள் அரசாங்கம் மக்களின் ஆட்சி என்பதால் மக்களின் பலத்தினாலேயே தவிர வேறு எவராலும் இதனை வீழ்த்த முடியாது என…

72 0 0
இலங்கை செய்திகள்

இலங்கை – இந்திய ஊடக நட்புறவுச் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்.!

இலங்கை – இந்திய ஊடக நட்புறவுச் சங்கத்தின் 3 ஆவது வருடாந்த பொதுக்கூட்டம், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தலைமையில் கொழும்பிலுள்ள தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.…

67 0 0
இலங்கை செய்திகள்

யோஷிதவுக்கு எதிரான பணச்சலவை வழக்கு ஒத்திவைப்பு.!

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை நவம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு…

65 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

ராகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொடிவீகும்புர பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு ராகமை பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு-15 பகுதியைச்…

80 0 0