உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இலங்கை – இந்திய ஊடக நட்புறவுச் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
70 பார்வைகள்

இலங்கை – இந்திய ஊடக நட்புறவுச் சங்கத்தின் 3 ஆவது வருடாந்த பொதுக்கூட்டம், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தலைமையில் கொழும்பிலுள்ள தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.

நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் போது சங்கத்தின் எதிர்வரும் ஆண்டுக்கான புதிய செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்தப் புதிய நிர்வாகக் குழுத் தெரிவின் போது, இலங்கை – இந்திய ஊடக நட்புறவுச் சங்கத்தின் தலைவராக நிஸ்தார் காசிம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக ஷெஹான் பரனகே, கலாணி குமாரசிங்க, ரிப்தி அலி, சந்தோஷ் மேனன், தினேஷ் டி அல்விஸ், அரோஷ பெர்னாண்டோ, ரொபேர்ட் அன்ரனி, தில்ருக்ஷி ஹதுன்னெத்தி, மகேஷ் பண்டார ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

நிகழ்வில் தலைமையுரையாற்றிய தூதுவர் சந்தோஷ் ஜா, இலங்கை மற்றும் இந்திய ஆகிய இரு நாட்டு ஊடக சமூகங்களுக்கு இடையிலான பரஸ்பர உறவையும் நன்மதிப்பையும் வலுப்படுத்துவதில் இந்தச் சங்கத்தின் பங்களிப்பைப் பெரிதும் பாராட்டியதுடன், செயற்குழுவின் எதிர்கால முயற்சிகளுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்திய அரசின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு விஜயம் செய்த இலங்கை ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து, இரு நாட்டு ஊடக உறவை மேம்படுத்தும் உயரிய நோக்கில் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் இந்தச் சங்கம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

தொடங்கப்பட்ட குறுகிய காலத்துக்குள் ஊடக விழா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பயிற்சிப் பட்டறை, செய்தி ஆசிரியர்களின் வட்டமேசை மாநாடு மற்றும் தேர்தல் செய்தி சேகரிப்பு குறித்த கலந்துரையாடல்கள் எனப் பல முக்கிய நிகழ்வுகளை இந்தச் சங்கம் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை.!

மன்னார் நகரப் பகுதியில் பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன்னார் நகரப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட…

10 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு நினைவுகூறல்.!

வடக்கு முஸ்லிம் மக்கள் தமது சொந்த மண்ணிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பின் 36 ஆவது வருட நினைவுகூறல் நிகழ்வும், சிறப்பு ஊடகவியலாளர் மாநாடும் இன்று (30)…

72 0 0
இலங்கை செய்திகள்

சுகாதார சீர்கேடுகளுடன் காணப்படும் பேருந்து நிலையம்; அதிகாரிகள் அசமந்தம்.!

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பிரதான பேருந்து நிலையம், தற்போது பயணிகள் பயன்படுத்த முடியாத அளவுக்குப் பாரிய…

58 0 0
இலங்கை செய்திகள்

மக்களின் பலத்தினால் மட்டுமே இந்த அரசை வீழ்த்த முடியும்.!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையிலான இந்த மக்கள் அரசாங்கம் மக்களின் ஆட்சி என்பதால் மக்களின் பலத்தினாலேயே தவிர வேறு எவராலும் இதனை வீழ்த்த முடியாது என…

76 0 0