உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
29 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது!

இந்திய செய்திகள் 3 மணி நேரம் முன்
72 பார்வைகள்

முதலமைச்சர் விஜய் தலைமையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று 29) சென்னை தலைமை செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், தமிழக அரசின் பல்வேறு முக்கியத் திட்டங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, அரசின் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவது, அரசுத் துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

புதிய தொழில் நிறுவனங்கள் தொடர்பான முடிவுகள், அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் துறைகளின் செயல்பாடுகள் ஆகியவை கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் சார்பில் ‘வெற்றி தமிழகம்’ என்ற தொலை நோக்குத் திட்டம் அறிவிக்கப்பட்டு, அதனைச் செயல்படுத்துவ தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

‘வெற்றி தமிழகம்’ தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் மொத்தம் 436 திட்டங்கள் மற்றும் இலக்குகள் இடம்பெற்றுள்ளன. இந்தத் திட்டங்கள் தொடர்பாகக் கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

அரசின் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் பல்வேறு துறைகளின் பங்களிப்பு மற்றும் அவற்றின் செயல்பாடுகள் தொடர்பான அம்சங்களும் பரிசீலிக்கப்படவுள்ளன. குறிப்பாக பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் அமைப்பது குறித்தும், மீனவர்கள் எதிர்ப்பு குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

தமிழக சட்டசபையில் முதலமைச்சர், விதி 110-ன் கீழ் பல் வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். அந்த அறிவிப்புகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றுக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

அரசின் அறிவிப்புகள் எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

ஒபரேசன் சிந்தூருக்கு பின் முதன் முறையாக, பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு

ஒப்பரேஷன் சிந்தூர்’ என்ற பெயரிலான இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு முதன்முறையாக, ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளது. இந்தியத் தலைநகர்…

78 0 0
இந்திய செய்திகள்

ஆந்திராவைத் தாக்கிய அர்னாப் புயல்! ஐவர் ப@லி

வங்காள விரிகுடாவில் உருவாகி இந்தியாவை நோக்கி நகர்ந்த ‘அர்னாப்’ புயலின் தாக்கம் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதிகாலை வேளையில் ஆந்திரப் பிரதேச…

83 0 0
இந்திய செய்திகள்

கரூரில் குறிவைக்கப்பட்ட விஜய் – முக்கிய நபருக்கு வலைவீச்சு

தமிழகத்தில் தனியார் பாடசாலை நிர்வாகிகளுக்கு அரச அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறிப் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது…

90 0 0
இந்திய செய்திகள்

அருணாச்சல பிரதேச எல்லையில் தொடரும் பதற்றம்!

இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில், சீன இராணுவத்தினருடன் இந்தியப் படையினர் தொடர்ந்து பல்வேறு மோதல் நிலைகளை எதிர்கொண்டு வருவதாக, இந்திய- திபெத் எல்லைக் காவல் படையின் தலைமை…

89 0 0