உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
28 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அருணாச்சல பிரதேச எல்லையில் தொடரும் பதற்றம்!

இந்திய செய்திகள் 5 மணி நேரம் முன்
83 பார்வைகள்

இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில், சீன இராணுவத்தினருடன் இந்தியப் படையினர் தொடர்ந்து பல்வேறு மோதல் நிலைகளை எதிர்கொண்டு வருவதாக, இந்திய- திபெத் எல்லைக் காவல் படையின் தலைமை அதிகாரி சத்ருஜீத் கபூர் தெரிவித்துள்ளார்.

இமயமலைப் பகுதியில் சீனாவுடனான எல்லையைப் பாதுகாக்கும் இந்தியாவின் துணை இராணுவப் படையின் தலைவரான அவர், கடந்த வாரம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

அருணாச்சலப் பிரதேசத்தின் தொலைதூரப் பகுதியான அப்பர் சுபன்சிரி பகுதியில், சீனப் படையினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவி வருவதாகவும், இந்தியப் படையினர் வழக்கமாக ரோந்துப் பணியில் ஈடுபடும் சில பகுதிகளுக்குச் செல்வதைத் தடுப்பதாகவும் உள்ளூர் அமைப்புகள் முன்னதாகக் குற்றஞ்சாட்டியிருந்தன.

எனினும், இந்திய அரசாங்கம் இந்த எல்லைப் பதற்றம் தொடர்பான முழுமையான விவரங்களை இதுவரை உறுதிப்படுத்தவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனப் படையினர் வழக்கமான ரோந்துப் பாதைகளிலிருந்து விலகிச் செயற்படும்போது, எல்லைப் பகுதிகளில் பதற்றம் ஏற்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான சுமார் 3 ஆயிரத்து 500 கிலோமீற்றர் நீளமான எல்லைப் பகுதியில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

கரூரில் குறிவைக்கப்பட்ட விஜய் – முக்கிய நபருக்கு வலைவீச்சு

தமிழகத்தில் தனியார் பாடசாலை நிர்வாகிகளுக்கு அரச அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறிப் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது…

82 0 0
இந்திய செய்திகள்

புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிலைக்கு இந்தியா முன்னேற்றம்: பிரதமர் மோடி பெருமிதம்

21ஆம் நூற்றாண்டில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் தனித்துவமான நிலைக்கு இந்தியா முன்னேறியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகளாவிய சவால்களுக்கு உறுதியான தீர்வுகளை வழங்கும் அதிநவீன தொழில்நுட்பங்களை…

82 0 0
இந்திய செய்திகள்

தமிழக சிறையில் பரபரப்பு – 17 கைதிகள் தப்பியோட்டம்!

தமிழ்நாட்டின் தேனி கிளைச் சிறையில் திங்கள்கிழமை (26) நள்ளிரவில் கைதி ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவரது அறைக்குள் சென்ற சிறை ஊழியர்களைத் தாக்கிவிட்டு, 17…

105 0 0
இந்திய செய்திகள்

கரூரிலேயே அவனை முடித்திருந்தால்..!! அன்பில் மகேஷ் ஆதரவாளர்களின் கருத்தால் சர்ச்சை!

தமிழ் நாட்டின் தனியார் பாடசாலை நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறிப் பண மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்…

100 0 0