உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
29 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஷிரான் பாஷிக்கிற்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் சிக்கினார்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
72 பார்வைகள்

பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் ஷிரான் பாஷிக்கிற்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தடுப்புக்காவல் கட்டளையின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாஷிக்கிற்கு தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி கொடுப்பதற்காக 2 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரல்லை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரிடமிருந்து இந்த பணத்தை அவர் பெற்றதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து 25,000 ரூபா பணம் கண்டெடுக்கப்பட்டதுடன், எஞ்சிய பணத்தை அவர் தனது வீட்டில் மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, சந்தேகநபர் இலஞ்சமாக பெற்ற 195,000 ரூபா பணத்தை பொலிஸார் மீட்டுள்ளதுடன் மூன்று அலைபேசிகளும் வழக்கு சான்றப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட கொன்ஸ்டபிள் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.

மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்சவின் ஆலோசனையின் பேரில் அந்தப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை – நெதர்லாந்து இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு.!

இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் நட்புறவின் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK)…

59 0 0
இலங்கை செய்திகள்

பொலிஸ் காவலில் இருந்த மற்றொரு சந்தேகநபரும் உ**யிரிழப்பு.!

கொபெய்கனே, பெத்தேகம பகுதியில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் நபர் ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்து கொபெய்கனே பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், பொலிஸ் காவலில் இருந்த…

80 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகைகள்.!

நாட்டிற்கு தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு விசேட பங்களிப்பை வழங்கும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய அனைத்து சலுகைகளையும்…

67 0 0
இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாண இலக்கிய விருது வழங்கும் விழா.!

எத்தனை சவால்கள் மற்றும் பொருளாதாரக் கஷ்டங்கள் நிலவினாலும், நமது கலாச்சாரத்தையும் கலைகளையும் பேணிப் பாதுகாத்து வரும் கலைஞர்களும் பண்பாட்டுச் செயல்பாட்டாளர்களும் கௌரவிக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண…

57 0 0