உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
29 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கிழக்கு மாகாண இலக்கிய விருது வழங்கும் விழா.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
54 பார்வைகள்

எத்தனை சவால்கள் மற்றும் பொருளாதாரக் கஷ்டங்கள் நிலவினாலும், நமது கலாச்சாரத்தையும் கலைகளையும் பேணிப் பாதுகாத்து வரும் கலைஞர்களும் பண்பாட்டுச் செயல்பாட்டாளர்களும் கௌரவிக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜெயந்த லால் ரத்னசேகர தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் “கிழக்கு மாகாண இலக்கிய விருது வழங்கும் விழா மட்டக்களப்பு “கோல்டன் ரிவர்” விடுதியில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.மணிவண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜெயந்த லால் ரத்னசேகர பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும், சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மாநகரசபையின் முல்வர் சிவம்பாக்கியநாதன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிறந்த படைப்பாளிகள் மற்றும் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கும் விழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வின்போது இளங்கலைஞர் விருதுகளும், 11பேர் நூல்களுக்கான சிறந்த எழுத்தாளர் விருதினையும், 17 கலைஞர்கள் இவ்வாண்டுக்கான வித்தகர் விருதுகளையும் இதன்போது பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வின்போது மூன்று இனங்களினையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர்,
கடந்த கால தொழில்நுட்ப வசதியற்ற காலகட்டத்தையும் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியையும் ஒப்பீடு செய்து பேசினார். “முன்னைய காலத்தில் தொலைபேசிகள் வீடுகளில் மட்டுமே நிலையாக இருந்தன. ஆனால் இன்று மொபைல் போன்கள் மூலம் எந்த நேரத்திலும் தொடர்பில் இருக்க முடிகிறது. இவ்வாறான நவீன காலத்தில், நாம் நமது கலாச்சாரத்தையும் சிந்தனைகளையும் எழுத்துப்பூர்வமாக அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். எழுதக்கூடிய திறமை உள்ளவர்கள் தங்கள் எண்ணங்களை தைரியமாக எழுதி வைக்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், “கடந்த 30 ஆண்டுகால யுத்த காலத்திலும் கிழக்கு மாகாணத்தின் கலாச்சாரம் அழியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பர்கர் என அனைத்து சமூகத்தினரும் இணைந்து வாழும் இந்த பன்முகத்தன்மை கிழக்கு மாகாணத்தின் தனிச்சிறப்பாகும். இது மற்ற மாகாணங்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது. அரசியல்வாதிகள் அரசியலைச் செய்யலாமே தவிர, மக்களின் ஒற்றுமையையோ கலாச்சாரத்தையோ யாராலும் அழிக்க முடியாது. நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற உணர்வோடு வாழ வேண்டும்”.

“ஒவ்வொரு தலைமுறையிலும் மூத்தவர்கள் ‘இன்றைய இளைஞர்கள் சரியாக இல்லை’ என்று சொல்வது இயல்பான ஒரு மனித பரிணாம வளர்ச்சியாகும்.

எனவே, புதிய தலைமுறையினரைக் குறை கூறாமல் அவர்களின் வேகத்தையும் தொழில்நுட்ப அறிவையும் புரிந்து கொண்டு அவர்களை நாம் வழிநடத்த வேண்டும். இத்தனை சவால்களுக்கு மத்தியிலும் நமது கலாச்சாரத்தைப் பாதுகாத்து நாட்டிற்கு பெருமை சேர்க்கும் கலைஞர்களைக் கௌரவிப்பது மாகாணத்திற்கும் நாட்டிற்கும் பெருமையளிக்கிறது” என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொலிஸ் காவலில் இருந்த மற்றொரு சந்தேகநபரும் உ**யிரிழப்பு.!

கொபெய்கனே, பெத்தேகம பகுதியில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் நபர் ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்து கொபெய்கனே பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், பொலிஸ் காவலில் இருந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாஷிக்கிற்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் சிக்கினார்.!

பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் ஷிரான் பாஷிக்கிற்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தடுப்புக்காவல் கட்டளையின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில்…

67 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகைகள்.!

நாட்டிற்கு தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு விசேட பங்களிப்பை வழங்கும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய அனைத்து சலுகைகளையும்…

62 0 0
இலங்கை செய்திகள்

அஸ்வெசும பயனாளிகள் தொடர்பில் வெளியான புதிய பட்டியல்; கொடுப்பனவை இழந்த பல இலட்சம் மக்கள்.!

இலங்கையில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்றுவரும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. பயனாளிகளைத் தெரிவு செய்யும் புதிய நடைமுறையால் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய வர்த்தமானி…

80 0 0