உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
29 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகைகள்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
67 பார்வைகள்

நாட்டிற்கு தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு விசேட பங்களிப்பை வழங்கும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய அனைத்து சலுகைகளையும் முழுமையாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (28) பிற்பகல் நடைபெற்ற இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்காக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நலன்புரித் திட்டங்களின் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது, அந்த ஊழியர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டம் மற்றும் கடன் வசதித்திட்டம் என்பன தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் தீர்வை வரி விலக்கு (Duty Free) வசதிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் தொடர்பான துல்லியமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தரவுத் தொகுப்பைப் பராமரிப்பதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதன் மூலம் அவர்களுக்கான நலன்புரித் திட்டங்களை மிகவும் முறைப்படுத்தப்பட்ட மற்றும் செயற்திறனான முறையில் நடைமுறைப்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இக்கலந்துரையாடலில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை – நெதர்லாந்து இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு.!

இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் நட்புறவின் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK)…

59 0 0
இலங்கை செய்திகள்

பொலிஸ் காவலில் இருந்த மற்றொரு சந்தேகநபரும் உ**யிரிழப்பு.!

கொபெய்கனே, பெத்தேகம பகுதியில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் நபர் ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்து கொபெய்கனே பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், பொலிஸ் காவலில் இருந்த…

80 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாஷிக்கிற்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் சிக்கினார்.!

பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் ஷிரான் பாஷிக்கிற்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தடுப்புக்காவல் கட்டளையின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில்…

71 0 0
இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாண இலக்கிய விருது வழங்கும் விழா.!

எத்தனை சவால்கள் மற்றும் பொருளாதாரக் கஷ்டங்கள் நிலவினாலும், நமது கலாச்சாரத்தையும் கலைகளையும் பேணிப் பாதுகாத்து வரும் கலைஞர்களும் பண்பாட்டுச் செயல்பாட்டாளர்களும் கௌரவிக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண…

57 0 0