உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
27 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நியூசிலாந்து, அவுஸ்திரேலிய தூதுவர்கள் பலாலி விமான நிலையத்திற்கு சென்று ஆய்வு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
62 பார்வைகள்

யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்துள்ள நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளின் தூதுவர்கள், இன்று பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

நேற்று தனித்தனியாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இவ்விரு நாடுகளின் தூதுவர்களும், தமது விஜயத்தின் முதற்கட்டமாக காங்கேசன்துறை துறைமுகத்துக்குச் சென்று பார்வையிட்டமையுடன், அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, காங்கேசன்துறை கடற்படை உயர் அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணப் பொலிஸ் உயர் அதிகாரிகளையும் அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இவ்வாறான முக்கிய சந்திப்புகளை நிறைவு செய்த நிலையிலேயே, தூதுவர்கள் இருவரும் இன்று பலாலி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்டு, அதன் செயற்பாடுகளைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சுழன்றடிக்கும் ‘அர்னாப்’ புயல்; இந்திய கடற்பரப்பில் தஞ்சமடைய இலங்கை படகுகளுக்கு அனுமதி.!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயலினால் ஏற்பட்டுள்ள அபாயகரமான காலநிலைச் சூழலில், இந்தியக் கடற்பரப்பில் பாதுகாப்பாகத் தஞ்சமடைவதற்குச் சுமார் 25 இலங்கை பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு அனுமதி…

76 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் கடற்றொழில் திணைக்களத்தை திட்டமிட்டு சிங்களமயமாக்க முயற்சியா?

மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தை திட்டமிட்டு முழுமையாக சிங்களமயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கடற்றொழிலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலுள்ள…

77 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருளுடன் சிக்கிய நபர்.!

அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவர வாவி அணைக்கட்டு பகுதியில் நேற்று திங்கட்கிழமை (26) மாலை அநுராதபுரம் குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை…

85 0 0
இலங்கை செய்திகள்

கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை.!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 23 மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள்…

91 0 0