உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

துப்பில்லாத ஹீரோவாக மாறிய துப்பாக்கி ஹீரோ: மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

இந்திய செய்திகள் 2 மணி நேரம் முன்
90 பார்வைகள்

தமிழகத்தில் அதிகரித்து வரும் தொடர் குற்றச் சம்பவங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் தொடரும் தாக்குதல்கள், உயிரிழப்பு சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் விவகாரங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

காவல்துறை தன் கட்டுப்பாட்டில் இல்லை எனவும், பெயரளவிற்கே முதலமைச்சர் பொறுப்பு வகிப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

திரையில் அரிவாள் தூக்கி நடித்த நாயகன், தற்போது செயலற்றவராக (inept hero) மாறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், முதலமைச்சரின் அலட்சியப் போக்கே மக்களின் உயிரைப் பறிப்பதாகச் சாடியுள்ளார்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுப்பைக் காப்பாற்றுவதில் அரசு முற்றிலும் தோற்றுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், மாநிலத்தில் தொடர்ச்சியாக அரங்கேறும் குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்தக் கோரி தீவிர கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

திரைப்படங்களில் அதிரடி நாயகனாக வலம் வந்தவர்கள், நிஜ நிர்வாகத்தில் செயல்திறன் அற்றவர்களாக மாறிவிட்டதாகவும், காவல்துறையின் மீது உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை எனவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தத் தவறிய அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

பிரபல சமையல் கலை நிபுணர் தாமு காலமானார்!

இந்தியாவின் பிரபல சமையல் கலை நிபுணரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்றவருமான செஃப் தாமு (Chef Damu), தனது 72ஆவது வயதில் இன்று (ஒக்டோபர் 25)…

102 0 0
இந்திய செய்திகள்

செஞ்சியில் காணாமல்போன சிறுமி : பொலிஸார் தீவிர விசாரணை

செஞ்சியில் காணாமல் போன சிறுமியின் பெற்றோரிடம் சிபிசிஐடி 2 ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த…

117 0 0
இந்திய செய்திகள்

தமிழகத்தில் நடப்பது ஆட்சியா இல்லை அலங்கோலமா? – கனிமொழி எம்.பி. கேள்வி

தமிழகத்தில் நடப்பது ஆட்சியா இல்லை அலங்கோலமா? என தி.மு.க எம்.பி.கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடியில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு…

95 0 0
இந்திய செய்திகள்

இந்தியாவில் ஆறு மாதக் குழந்தைகளுக்கான உணவில் இனிப்பு சேர்க்கத் தடை? 

ஆறு மாதம் வரையிலான குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சுக்ரோஸ் (Sucrose) மற்றும் பிரக்டோஸ் (Fructose) போன்ற சர்க்கரை வகைகளைச் சேர்ப்பதற்குத் தடை விதிக்க இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு…

115 0 0