உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கொக்குவில் இந்துக் கல்லூரியில் இராணுவத்தால் நடாத்தப்பட்ட தாக்குதலில் கொ**ல்லப்பட்டவர்களின் நினைவேந்தல்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
82 பார்வைகள்

யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் நடாத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (25) நடைபெற்றது.

கொக்குவில் இந்துக் கல்லூரியின் மைதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று காலை 8 மணியளவில் நினைவேந்தல் இடம்பெற்றது.

படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களாலும், அப்பகுதி மக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்காக சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1987 ஒக்டோபரில் இந்திய இராணுவத்திற்கும் – விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்தம் தொடங்கிய பின்னர் இந்திய இராணுவத்தின் பரவலான விமானக்குண்டு வீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதலுக்கு அஞ்சி கொக்குவில், ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த பல மக்கள் பாதுகாப்புக்கருதி கொக்குவில் இந்துக் கல்லூரியில் தஞ்சமடைந்தனர்.

1987 ஒக்டோபர் 24ஆம் திகதி காங்கேசன்துறை வீதி வழியாக யாழ் நகரம் நோக்கிக் கவச வாகனங்கள், டாங்கிகள் சகிதம் முன்னேறிய இந்தியப் படையினர் கொக்குவில் இந்துக் கல்லூரியை வந்தடைந்ததும், கவச வாகனங்களிலிருந்து அங்கு அடைக்கலம் புகுந்திருந்த பொதுமக்கள் தங்கியிருந்த பாடசாலை கட்டிடங்கள் மேல் பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டனர். இதனால் பாடசாலை வகுப்பறையில் தங்கியிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உரிய முறைப்படி தகனம் செய்வதற்கான சூழ்நிலையில்லாததால் இறந்தவர்களின் சடலங்கள் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஒரே குழியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ். பல்கலைக்கழக பேச்சுப் போட்டியில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் இரண்டாமிடம்.!

யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறையால் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் ஜெரோம் ஜொய்சன் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். யாழ்.…

88 0 0
இலங்கை செய்திகள்

கொக்குத்தொடுவாய் உப்பளத் திட்டத்தை கைவிடுங்கள்.!

முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் முன்மொழியப்பட்ட உப்பளத் திட்டத்தினை கைவிடுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் கோரிக்கை கடிதம் அனுப்பிவைத்துள்ளார். இது…

79 0 0
இலங்கை செய்திகள்

வேகமாகப் பரவும் மர்மத் தாவரம்; கட்டுப்படுத்துவது அவசியம் என எச்சரிக்கை.!

நயினாதீவில் ஆலங்குளத்தை அண்டிய பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் வேகமாகப் பரவி வரும் இனங்காணப்படாத தாவரம், மண்வளத்தை மேம்படுத்தும் நன்மைகளைக் கொண்டிருந்தாலும், கட்டுப்பாடின்றிப் பரவினால் விவசாய நிலங்களையும்…

82 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மட்ட தட்டெறிதலில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் சாதனை.!

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில், தட்டெறிதல் பிரிவில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் வினோதன் விகாஷ் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை…

75 0 0