உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் மீண்டும் பழைய மாணவர் சங்கம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
76 பார்வைகள்

1869 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் பெருமையையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து, அதன் எதிர்கால வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், நீண்டகாலமாகச் செயற்பாடற்று இருந்த பழைய மாணவர் சங்கத்தை மீண்டும் ஸ்தாபிப்பதற்கான விசேட கூட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 01 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இப்பாடசாலையில் கல்வி கற்ற அனைத்துப் பழைய மாணவர்களையும் மீண்டும் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைத்து, பாடசாலையின் கல்வி வளர்ச்சி, மாணவர்களின் ஒழுக்க மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி மற்றும் மாணவர்களின் எதிர்கால நல்வாழ்வு ஆகியவற்றுக்குப் பங்களிக்கும் ஒரு பலமிக்க அமைப்பை உருவாக்குவதே இக் கூட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

எனவே, அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற அனைத்துப் பழைய மாணவர்களும், பாடசாலையின் நலன்விரும்பிகளும் இம்முயற்சியில் ஆர்வத்துடன் பங்கேற்று, தாய் பாடசாலையின் மறுமலர்ச்சிக்காகவும் எதிர்கால வளர்ச்சிக்காகவும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு சங்கம் அமைக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், இச் செய்தியினைத் தங்களது சக பழைய மாணவர்கள், நண்பர்கள் மற்றும் பாடசாலையுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் பகிர்ந்து இக் கூட்டம் பெருவெற்றி பெற ஒத்துழைக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய மட்ட தட்டெறிதலில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் சாதனை.!

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில், தட்டெறிதல் பிரிவில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் வினோதன் விகாஷ் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை…

67 0 0
இலங்கை செய்திகள்

வடமராட்சியில் சிறுவர்களிடையே அதிகரிக்கும் நோய்.!

யாழ். வடமராட்சி பிரதேசத்தில் அண்மை நாள்களாகச் சிறுவர்கள் மத்தியில் இரத்தச் சோகை பாதிப்பு சடுதியாக அதிகரித்து வருகின்றது என்று மருத்துவ வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், கடந்த…

44 0 0
இலங்கை செய்திகள்

உந்துருளி விபத்தில் இளைஞன் ப**லி.!

அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சோக சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில்…

82 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு ஒருபோதும் பொதுமன்னிப்பு இல்லை.!

நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கும் நிலைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஒருபோதும் செல்லமாட்டார் என்று…

89 0 0