உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அனுராதபுரம் புனித பூமியின் அபிவிருத்தித் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
63 பார்வைகள்

அனுராதபுரம் புனித நகரத்தின் வரலாற்றுச் சிறப்பு மற்றும் புராதன மதப் பின்னணியைப் பாதுகாத்து, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டப் பணிகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நேரடியாக சென்று பார்வையிட்டார்.

இந்திய அரசின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட செலவு 7.7 பில்லியன் ரூபாவாகும். இதற்கான அபிவிருத்திக் கட்டமைப்புத் திட்டம் தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது.

அனுராதபுரம் புனித நகரத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி, நடந்து சென்று அபிவிருத்திப் பணிகளுக்குரிய காணிகள் மற்றும் திட்ட வரைபடங்களைப் பார்வையிட்டமையுடன், அதிகாரிகளுடன் கலந்துரையாடி முன்னேற்றக் கட்டங்கள் குறித்துக் கேட்டறிந்தார்.

புனித நகரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்று தடாகங்களைச் சுற்றியுள்ள வீதி அபிவிருத்திப் பணிகள், மேற்கு ஆராமய விகாரை வளாகத்தின் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மற்றும் ருவன்வெலிசாயவுக்கு அருகில் 8 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள வாகன நிறுத்துமிடத்துக்கான காணி என்பவற்றையும் ஜனாதிபதி ஆய்வு செய்தார்.

தொன்மை மற்றும் மதப் பின்னணியைப் பாதுகாத்து அனைத்துப் பணிகளையும் முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, திட்ட அமுலாக்கத்தின் போது எழும் பிரச்சினைகளுக்குத் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் இணைந்து தீர்வுகண்டு பணிகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தினார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலிசாயவை வழிபட்டு ஆசி பெற்ற ஜனாதிபதிக்கு, ருவன்வெலிசாய விகாராதிபதி ஈதலவெட்டுணுவெவே ஞானதிலக்க நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஆசி வழங்கினர்.

இந்த நிகழ்வில் புத்தசாசன மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, வட மத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உட்பட துறை சார்ந்த பல உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீண்ட கூந்தல் கொண்ட பெண்களும் இனி கவனமாக இருக்க வேண்டும்.!

புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் ஆங்கிலப் பிரதியில், ‘நீண்ட கூந்தல் கொண்டவர்கள் மற்றும் பச்சை குத்தியுள்ள நபர்கள்’ மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் எனப்…

73 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களுடன் கொழும்பில் விசேட பேச்சு.!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக, அந்தச் சபைகளின் தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்களைக் கொழும்புக்கு அழைத்து விசேட…

79 0 0
இலங்கை செய்திகள்

கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான பொதிகள் கைப்பற்றல்.!

காலி, தலல்ல கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் அடங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் பல பொதிகள் பொலிஸார் மற்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து இன்று…

82 0 0
இலங்கை செய்திகள்

அகில இலங்கை கணிதப் போட்டியில் வடக்கு மாகாண அணி இரண்டாம் இடம்.!

அகில இலங்கை கணிதப் போட்டியில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற மாணவர் அணி, இரண்டாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது. அகில இலங்கை கணிதப் போட்டி –…

77 0 0